Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

தேவி 2 படப்பிடிப்பை நிறைவு செய்த தமன்னா

இயக்குனர் ஏஎல் விஜயின் அடுத்த படைப்பான தேவி 2 படப்பிடிப்பை தமன்னா நிறைவு செய்துள்ளார்.

இயக்குனர் ஏஎல் விஜய் இயக்கத்தில் 'லட்சுமி' படத்திற்கு பிறகு உருவாகி வரும் படம் 'தேவி 2'. தேவி, லட்சுமி படங்களுக்கு பிறகு மீண்டும் இணைந்துள்ள பிரபு தேவா, ஏஎல் விஜய் கூட்டணியில் உருவாகி வரும் இந்த படம் 'தேவி' படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகி வருகிறது. முதல் பாகத்தில் நடிகை தமன்னா உடம்பில் பேய் புகுந்து ஆட்டம் காட்டியது. முதல் பாகத்தின் இறுதியில் பிரபு தேவா உடம்பிற்குள் பேய் செல்வது போன்று படத்தை முடித்தனர்.

இதன் பிறகு தற்போது உருவாகி வரும் இரண்டாம் பாகத்தில், பிரபு தேவா உடம்பிற்குள் பேய் சென்று என்னவெல்லாம்  செய்கிறது என்பது போன்ற காட்சிகளை படமாக்கி வருகின்றனர். தற்போது மும்முரமாக மொரிஸியஸில் நடைபெற்று வந்த இந்த படத்தின் படப்பிடிப்பில் தமன்னா தன்னுடைய காட்சிகள் முழுவதையும் நடித்து முடித்துள்ளார். முதல் பாகத்தை விட, இரண்டாம் பாகத்தில் தமன்னாவின் நடிப்பு பேசப்படும் விதமாக இருக்கும் என்று இயக்குனர் ஏஎல் விஜய் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

தேவி 2 படப்பிடிப்பை நிறைவு செய்த தமன்னா