Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாகும் பிரபல நாயகி

kanne kalaimane movie cast

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் தற்பொழுது உருவாகியுள்ள படம் 'நிமிர்'. இந்த படத்தினை பிரயதர்சன் இயக்கியுள்ளார். இதனை அடுத்து உதயநிதி பல படங்களில் நடிக்கவிருப்பதாக தகவல் வந்துள்ளது. தென்மேற்குப் பருவக்காற்று, நீர்ப்பறவை, தர்மதுரை போன்ற வெற்றி படங்களை கொடுத்துள்ள இயக்குனர் சீனுராமசாமி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் அடுத்த படம் இயக்கவிருக்கிறது. 'கண்ணே கலைமானே' என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தினை உதயநிதி ஸ்டாலினுக்கு சொந்தமான ‘ரெட் ஜெயன்ட் மூவீஸ்’ தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் இப்படத்தினை அவரே தயாரிக்கவுள்ளார்.

அடுத்த வருடம் ஜனவரி மாதம் 19ம் தேதி முதல் இப்படத்திற்கான படப்பிடிப்பு துவங்கவுள்ளது. மேலும் இப்படத்தின் நாயகியாக தமன்னா நடிக்கவுள்ளார். இந்த படத்தின் மூலம் முதல் முறையாக உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக இணையவுள்ளார். மேலும் இந்த படத்தில் இணையவிருக்கும் இதர நடிகர்-நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாகும் பிரபல நாயகி