சினிமா ஸ்ட்ரைக் தொடர்ந்தால் விஷால் முன்பு தீக்குளிப்பேன்
விக்னேஷ் (Author) Published Date : Apr 07, 2018 14:28 ISTபொழுதுபோக்கு
தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர்கள் சங்க போராட்டம் ஒரு மாதத்திற்கும் மேலாக நடந்து கொண்டே வருகிறது. இந்த ஸ்ட்ரைக்கால் சினிமாவை வாழ்க்கையாக நம்பியிருக்கும் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் உள்ளிட்ட அனைவரும் கடுமையாக பாதிப்படைந்துள்ளனர். இந்த போராட்டம் டிஜிட்டல் கட்டணத்தை குறைக்கவும், தியேட்டரில் டிக்கெட் கட்டணத்தை முறைப்படுத்தவும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து நடைபெற்று வருகிறது.
முன்னதாக தயாரிப்பாளர்களுக்கும், தியேட்டர் உரிமையாளர்களுக்கும் இடையேயான பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில் இந்த ஸ்ட்ரைக் எப்போது முடியும் என்று தெரியவில்லை. இந்நிலையில் தமிழ் சினிமாவில் போராட்டம் தொடர்ந்தால் விஷால் முன்பு தீக்குளிப்பேன் என தொழில்நுட்ப சங்க பொதுச்செயலாளர் தனபால் என்பவர் தெரிவித்துள்ளார். மேலும் இவர் தயாரிப்பாளர் சங்க தலைவரான விஷால் மீது கடுமையான குற்றச்சாட்டுகளையும் பதிவு செய்துள்ளார்.
அவர் கூறியதில் "செல்வமணி மற்றும் விஷால் ஆகியோர் இணைந்து தொடர்ந்து பல தவறுகளை செய்து வருகின்றனர். இவர்களால் தான் எங்களது தொழில்கள் கடுமையாக பாதிப்படைந்துள்ளது. இவர்கள் இப்படியே செய்து வந்தால் நான் கண்டிப்பாக விஷால் முன்பு தீக்குளிப்பேன். அப்போது தான் அனைவருக்கும் தெரிய வரும்" என்று அவர் தெரிவித்துள்ளார். இதனால் தற்போது தமிழ் திரை வட்டாரங்களிடையே பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.