சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் 'மனுசங்கடா' தமிழ் படம்
யசோதா (Author) Published Date : Nov 21, 2017 21:22 ISTபொழுதுபோக்கு
48-வது சர்வதேச திரைப்பட விழா நேற்று கோவாவின் தலைநகரான பானாஜியில் தொடங்கப்பட்டது. இந்த திரைப்பட விழாவை இந்திய திரைப்பட கழகம் பாரீசில் உள்ள சர்வதேச திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி அமைப்புடன் இணைந்து நடத்துகிறது. இந்த திரைப்பட விழாவில் திரையிடுவதற்காக உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் தயாரான படங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்திய படங்களுக்கான போட்டி பிரிவுகளில் திரையிடுவதற்காக 'மனுசங்கடா' திரைப்படம் அனுப்பி வைக்க பட்டுள்ளது.
இதனுடன் 'க்ஷிடிஜ்-ஏ ஹொரிசான்' என்ற மராத்திய படமும், 'பூர்ணா' என்ற ஹிந்தி படமும், 'ரெயில்வே சில்ட்ரன்' என்ற கன்னட படமும், 'டேக் ஆப்' என்ற மலையாள படமும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் ஜெர்மனி, பிரான்ஸ், தைவான், ஜார்ஜியா போன்ற நாடுகளில் தயாரான படங்களும் திரையிடப்படுகின்றன. சிறந்த படத்திற்கு யூனஸ்க்கோ காந்தி பதக்கம் வழங்கப்படும்.