Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

90ml திரைப்படம் சட்டவிரோதமாக தமிழ் ராக்கர்ஸ் வெளியிட்டது

தமிழ் ராக்கர்ஸ் இணயதளம் இன்று 90ml படத்தின் பதிப்புகளை வெளியிட்டது

90ml திரைப்படம் இன்று உலகெங்கிலும் வெளியானது மற்றும் சிறப்பு கட்சியாக அதிகாலை 5 மணிக்கு வெளியானது. இது ஒரு இரட்டை அர்த்தம் கொண்ட நகைச்சுவை படம், இளைஞர்களை மிகவும் கவர்ந்துள்ளது. இந்த படம் நகைச்சுவையாக இருந்தாலும் இந்த படம் 18+ வயதுடையவர்கள் மட்டுமே பார்க்க வேண்டும்.

இந்த படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள நடிகை ஓவியா விஜய் டிவி நடத்திய பிக்பாஸ்  நிகழ்ச்சியில் மிகவும் பிரபலம் அடைந்து மக்கள் மனதில் இடம்பெற்றார். பட கதையை பார்க்கும்பட்சத்தில் நவீனகால வயதுடைய பெண்கள் எப்படி இருப்பார்கள் மற்றும் அவர்கள் பேசிக்கொள்ளும் இரட்டை அர்த்த வசனங்கள், மது அருந்துவது மற்றும் புகைபிடிப்பது போன்ற காட்சிகள் இருப்பதால் பல விமர்சகர்களால் விமர்சிக்கப்பட்ட இந்த திரைப்படம் ஓவியா அவர்களுக்கு நல்லபெயரை கொடுக்குமா என்பது சந்தேகம் தான்.

இந்நிலையில் பல படங்களை சட்டவிரோதமாக இணையத்தில் வெளியிட்டு வரும் தமிழ் ராக்கர்ஸ் இணயதளம் இன்று 90ml படத்தின் பதிப்புகளை வெளியிட்டது. இதுபோன்று வெளியாவது நல்ல படமாக இருந்தாலும் அல்லது நல்ல வரவேற்ப்பு கிடைக்காத படமாக இருந்தாலும் , தயாரிப்பாளர்களுக்கு பெருத்த நஷ்டமே. தயவு செய்து படங்களை திரையரங்குகளில் பார்க்குமாறு வேண்டி கேட்டுக்கொள்கிறோம்.

90ml திரைப்படம் சட்டவிரோதமாக தமிழ் ராக்கர்ஸ் வெளியிட்டது