கோபத்தின் உச்சியில் தமிழ் ராக்கர்ஸ் தயாரிப்பாளர்களுக்கு அதிரடி சவால்
ராசு (Author) Published Date : Oct 02, 2018 11:00 ISTபொழுதுபோக்கு
இன்று முதல் தனது புதிய பெயருடன் தமிழ் ராக்கர்ஸ் இணையத்தளம் மாற்றப்பட்டுள்ளது. தன்னுடைய புது இணையதளத்தில் முதல் வரியில், " இந்த செய்தி சம்பந்த பட்டவர்களுக்கு - நீங்கள் கடந்த வாரம் செய்ததற்கு மன்னிப்பு கேட்கும் வரை, இது தொடரும் " என்று தயாரிப்பாளர்களுக்கு சவால் விடும் விதமாக தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்தியுள்ளது.
நான்கு மாதத்திற்கு முன்பு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க போராட்டம், திரையரங்கு உரிமையாளர்கள் சங்க போராட்டம் என பல போராட்டங்கள் நடந்து முடிந்து தற்போது ஓரளவிற்கு திரைப்படங்கள் வரத்தொடங்கியுள்ளது. இவர்களின் போராட்டங்கள் வெற்றிபெற்றுள்ளதா அல்லது தற்காலிகமா தள்ளி வைக்கப்பட்டுள்ளதா என்று ஒருபுறம் இருக்க, இதற்கு எந்த ஒருவகையிலும் தொடர்பு இல்லாததை போல் தமிழ் ராக்கர்ஸ் குழு புதிய திரைப்படங்களை, ரிலீஸ் ஆன முதல் காட்சியில் இருந்தே பதிவேற்றம் செய்து வருகின்றனர்.
இவர்களின் செயல் பெரும்பாலான தயாரிப்பாளர்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது. இது போன்ற செயல்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தாலும் அதிலிருந்து தப்பித்து குறிப்பிட்ட சில படங்கள் திரையரங்குகளில் அதிக வசூல் பெற்றது. இதற்கெல்லாம் ஒரு முடிவுகட்ட தயாரிப்பாளர் சங்கத்தினர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பொதுவாக ஒவ்வொரு வாரம் புதிய படங்கள் வெளிவரும் போது, தயாரிப்பாளர் சங்கத்தினர் அல்லது வெளிவரும் திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள் அப்பொழுது செயல்பாட்டில் உள்ள தமிழ் ராக்கர்ஸ் போன்ற திருட்டு இணையதளங்களை, இன்டர்நெட் சேவை மையங்களின் உதவியுடன் முடக்குவார்கள். அவ்வாறு செய்கையில், நமது மொபைல் மற்றும் வீட்டில் உபயோக படுத்தும் இணையத்தில் அவர்களின் இணையதளங்கள் வேலை செய்யது. ஆனால் தற்போது அதிநவீன வசதிகளுடன் இருக்கும் தமிழ் ராக்கர்ஸ் இணையத்தளம் ஒவ்வொரு வாரமும் தங்களின் இணையதளத்தின் கடைசி அடையாளத்தை மற்றுமே மாற்றுவார்கள். உதாரணத்திற்கு tamilrockers.cc என்று இருந்தால் புதிய படங்கள் வரும்போது, இது முடுக்கப்பட்டுவிடும்.
பின் இவர்கள் tamilrockers.aa என்று மாற்றம் செய்வார்கள். ஆனால் இந்த முறை அப்படி செய்யாமல் தங்களது இணையதளத்தின் முழு முகவரியை மாற்றி உள்ளனர். இது தயாரிப்பாளர் சங்கத்தினர்களுக்கு கிடைத்த முதல் வெற்றி என்றே கூறலாம். இவர்களின் விடாமுயற்சின் பலன் இன்று கிடைத்துள்ளது. இந்த புதிய பெயர் மாற்றத்திற்கு பின், அவர்களது இணையத்தளத்தில் மிகுந்த கோபத்துடன் "நீங்கள் மன்னிப்பு கேட்கும் வரையில், இது தொடரும்" என்று தெரிவித்துள்ளது திரைப்பட துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு புறம் தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் இது போன்ற செயல்கள் நடைபெறாமல் இருக்க முயற்சி எடுத்து வருகின்றனர். மறுபுறம், திரையரங்கு உரிமையாளர்கள் ஒரு படி மேல் சென்று, தங்களது திரையரங்குகளில் வரும் அனைத்து தரப்பினரையும் CCTV கேமரா மூலம் கண்காணிக்க தொடங்கியுள்ளனர். இது தவிர திரையரங்குகளில் உள்ள திரையின் மேல் ஒரு கருவி பொருத்தி, மக்களின் கண்களை ஸ்கேன் செய்வதை போல் ஏதேனும் கேமரா சாதனங்கள் செயல்பட்டால் கண்டுபிடிக்க கூடிய முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் முதல் முயற்சியாக கரூர் திரையரங்கு உரிமையாளர்கள் கருவியை செயல்படுத்தும் முயற்சியில் இறங்கி உள்ளது வரவேற்க வேண்டிய ஒன்று. இந்த அளவிற்கு திரையரங்கு உரிமையாளர்கள் கடுமையாக சோதனை செய்வதற்கு, தயாரிப்பாளர்கள் அவர்களின் மீது போடும் வழக்குகள் தான் காரணம். CUBE தொழில்நுட்பத்தில், வெளிவரும் எந்த ஒரு படத்தை திருட்டு தனமாக படம்பிடித்து அதை இணையத்தில் ஏற்றினால், சம்பந்த பட்ட படத்தின் தயாரிப்பாளர் அந்த திருட்டு விடீயோவை CUBE அதிகாரிகளிடம் கொடுப்பார்கள். இந்த வீடியோ எந்த திரையரங்குகளில் எடுக்கப்பட்டது என்று CUBE துல்லியமாக கண்டுபிடிக்கின்றனர்.
இவ்வாறு தெரிய வரும் திரையரங்கு உரிமையாளர்களின் மேல் அந்த படத்தின் தயாரிப்பாளர் வழக்கு பதிவு செய்து, தங்களுக்கு ஏற்படும் நஷ்டத்தை கேட்கின்றனர். இதற்கு ஒரு துளியும் சம்பந்தமில்லாமல் இருக்கும் திரையரங்கு உரிமையாளர்கள் எவ்வாறு பொறுப்பாக முடியும் என்பது இவர்களின் கேள்வி. எனினும், தங்களால் முடிந்த வரை இதை தடுக்க முயற்சி எடுத்து, CCTV கேமரா உதவியுடன் திருட்டு விடியோவை எடுப்பவர்களை கண்டுபிடிக்க தீவிர முயற்சியில் களமிறங்கியுள்ளனர். இது குறித்து சில தொழில்நுட்ப வல்லுனர்களுடன் ஆலோசித்த போது, தமிழ் ராக்கர்ஸ் போன்றவர்கள் ஒரு வர்த்தகம் சார்ந்த இணையத்தளம் என்றும் அவர்களிடம் சிலர் விடியோவை அனுப்பி பணம் பெறுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
உதாரணமாக அமேசான் இணயதளம் ஒரு வர்த்தக இணையத்தளம், இதில் இவர்கள் எந்த ஒரு பொருளையும் தயாரிப்பதில்லை, வேறு ஒருவரிடம் இருக்கும் பொருளை தங்களது இணையத்தளத்தில் பதிவேற்றி, மக்களிடம் விற்று விற்பனையாளர்களுக்கு தேவையான பணத்தை கொடுக்கிறார்கள். இதே போல் தமிழ் ராக்கர்ஸ் போன்ற இனைய தளங்கள், திருட்டு தனமாக வீடியோ எடுப்பதில்லை. தமிழகத்தில் உள்ள பல்வேறு குழுக்கள் எடுக்கும் விடீயோக்கள் எங்கோ ஒருவர் மூலமாக தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்திற்கு அனுப்பப்பட்டு பணம் பெறுகிறார்கள். எனவே, ஒரு வேளை தமிழ் ராக்கர்ஸ் இணையதளங்கள் முடக்கப்பட்டாலும், திருட்டு வீடியோ எடுப்பவர்கள் நிறுத்தப்படுவார்களா என்பது கேள்விக்குறியே.