Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

சூர்யா தானா சேர்ந்த கூட்டத்திற்கு டப்பிங் ஆரம்பித்தார்

சூர்யா தானா சேர்ந்த கூட்டத்திற்கு டப்பிங் ஆரம்பித்தார்

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் தானா சேர்ந்த கூட்டம் படம் உருவாகியுள்ளது. சூர்யாவிற்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கும் இப்படத்தில் கார்த்திக், ரம்யா கிருஷ்ணன், ஆர்ஜே பாலாஜி, நந்தா, செந்தில் மற்றும் சிலர் நடித்துள்ளனர். அடுத்த வருடம் ஜனவரி மாதம் 12ம் தேதி வெளிவரவிருக்கும் இப்படத்தின் போஸ்ட் ப்ரொடெக்ஷன் பணியில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு, கிரேக்கர் பிரசாத் எடிட்டிங் பணியில் இணைந்துள்ளனர். இந்நிலையில் படத்திற்கு அனிருத் இசையமைத்த 'சொடக்கு மேல சொடக்கு போடுது'  பாடலுக்கு அதிகளவு வரவேற்பினை ரசிகர்களுக்கிடையில் பெற்றிருந்தது. இதன் மூலம் படத்திற்கான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது.

2டி என்டர்டைமென்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் இறுதி கட்ட பணியாக சூர்யா தனது டப்பிங் பணியில் முதல் பாதி அளவு முடித்து விட்டதாக இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது ட்விட்டரில் பதிவு செய்ததோடு டப்பிங் செய்து கொண்டிருக்கும் சூர்யாவின் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். 

சூர்யா தானா சேர்ந்த கூட்டத்திற்கு டப்பிங் ஆரம்பித்தார்