தடம் படம் தமிழ் ராக்கர்ஸ் இணையத்தளத்தில் திருட்டு பதிவை வெளியிட்டுள்ளனர்
புருசோத்தமன் (Author) Published Date : Mar 01, 2019 20:23 ISTபொழுதுபோக்கு
தடம் திரைப்படம் பத்திரிகையாளர்களுக்கு சிறப்பு ஒளிபரப்பு செய்யப்பட்டு , அவர்களிடம் இருந்து நேர்மறையான நல்ல வரவேற்பை பெற்றது. குற்றம் - திரில்லர் திரைப்படமான 'தடம்' உலகெங்கிலும் மார்ச் 1 திரையரங்குகளில் வெளியானது. இந்த படம் தமிழ்நாட்டில் வெளியான இன்று தமிழ் ராக்கர்ஸ் இணையத்தளத்தில் சட்டவிரோதமாக வெளியிட்டுள்ளனர். வெளியீட்டு நாளில் புதிய படம் வெளியாவதை தடுக்க முயற்சி எடுத்தும் பலன் இல்லை.
இது தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இந்த படத்தின் இயக்குனர் மகிழ் தடையறத் தாக்க வெற்றி திரைப்படத்தை இயக்கியவர் மற்றும் இதிலும் நடிகர் அருண் விஜய் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.இவர்களது கூட்டணியில் வெளியாகும் தடம் திரைப்படமும் நல்ல ஒரு திரில்லர் படமாக அமைந்துள்ளது.
தடம் திரைப்படம் வெளியாகும் இதே நாளில் 90ml மற்றும் இயக்குனர் சேரனனின் திருமணம் திரைப்படமும் வெளியாகியுள்ளது. மக்கள் அனைவரும் இணையத்தில் படங்களை பார்ப்பதை தவிர்த்து தயவுசெய்து திரையரங்குகளில் பார்க்கவேண்டும் மற்றும் இதனால் திரைப்பட தொழிலை நம்பி இருக்கும் உழைப்பாளிகளுக்கு உதவியாக இருக்கும்.