Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

தல அஜித்தின் புதிய புகைப்படம் வைரல்

ajith new stills viral

வீரம், வேதாளம், விவேகம் வெற்றியை தொடர்ந்து நான்காவது முறையாக இயக்குனர் சிறுத்தை சிவா - தல அஜித் கூட்டணி இணைந்துள்ளது. இந்த கூட்டணியின் மூலம் தல அஜித் இளமை தோற்றத்தில் நடிக்கவிருப்பதாக படக்குழு தகவலை முன்னதாகவே வெளியிட்டிருந்தது. 'மங்காத்தா' படத்தில் தொடர்ந்த அஜித்தின் சால்ட் பெப்பர் லுக் இந்த படத்தின் மூலம் முடிவடைந்து இளமை பருவத்தில் உடல் எடையை குறைத்து ஸ்டைலிஷான லுக்கில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியானது. இந்த தகவலை நிருபிக்கும் விதமாக கடந்த நாட்களில் அஜித்தின் புதிய புகைப்படம், வீடியோ போன்றவை வெளியானது. இதில் அஜித் லுக் ரசிகர்கள் மத்தியில் வெகுவாக வரவேற்கப்பட்டது. மேலும் இந்த புகைப்படம், வீடியோ வலைத்தளத்தில் பெருமளவில் வைரலானதை தொடர்ந்து படத்திற்கு 'விசுவாசம்' என்ற தலைப்பினை வைத்து படக்குழு வெளியிட்டது. இந்த தலைப்பினை புது வித  தோற்றத்தை கையாண்டு வலைத்தளத்தில் ரசிகர்கள் ட்ரெண்டாக்கினர். 

இந்நிலையில் அஜித்தின் புதிய புகைப்படம் தற்பொழுது வலைத்தளத்தில் பரவி வருகிறது. பரவி வரும் புதிய புகைப்படத்தின் லுக் அஜித்தின் 58வது படத்தில் நடக்கவிருக்கும் லுக்காக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

விவேகம் படத்தினை தொடர்ந்து தல அஜித்தின் 58வது படமான 'விசுவாசம்' படத்தினையும் 'சத்யஜோதி ஃபிலிம்ஸ்' தயாரிப்பு நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்க உள்ளது. இந்த படத்தில் வெற்றி ஒளிப்பதிவாளராகவும் ரூபன் படத்தொகுப்பாளராகவும் இணைத்துள்ளனர். மேலும் இசையமைக்கும் பணியில் யுவன் சங்கர் ராஜா இணைந்திருப்பதாக தகவல் வெளியானதை தொடர்ந்து 'விக்ரம் வேதா' புகழ் சாம் சி.எஸ். ஒப்பந்தமாகி இருப்பதாக செய்திகள் வெளியானது. இந்த தகவலை படக்குழு மறுத்து விட்டது. இன்னும் சில நாட்களில் இசையமைக்கும் பணியில் இணையவிருக்கும் பிரபலம் பற்றிய தகவல் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளிவர உள்ள இப்படத்தின் சிறப்பு பூஜை கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றதை தொடந்து இம்மாத இறுதியில் படப்பிடிப்பு துவங்க இருப்பதாக தகவல் வந்துள்ளது. 

தல அஜித்தின் புதிய புகைப்படம் வைரல்