Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

நாளை வெளியாகவுள்ள தல அஜித்தின் விசுவாசம் செகண்ட் லுக் போஸ்டர்

விசுவாசம் படத்தின் செகண்ட் லுக் போஸ்டரை நாளை வெளியிட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

தல அஜித் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் உருவாகி வரும் படம் 'விசுவாசம்'. முன்னதாக இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு கடந்த ஆகஸ்ட் மாதம் 23 வியாழக்கிழமையில் வெளியிட்டது. இதன் பிறகு இந்த படத்தின் அடுத்த அப்டேட்டிற்காக ரசிகர்கள் ஆர்வமாக காத்திருந்தனர். இந்நிலையில் தற்போது இந்த படத்தின் செகண்ட் லுக் போஸ்டரை நாளை (அக்டொபர் 24) அதே வியாழக்கிழமையில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

தல அஜித் அண்ணன் தம்பியாக இரட்டை வேடத்தில் நடித்து அசத்தி வரும் இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். இந்த படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு தற்போது மும்பையில் நடைபெற்று வருகின்றது. இதற்கிடையில் இந்த படத்தினை பொங்கலுக்கு வெளியிட பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட்டு வருகின்றது. வரும் பொங்கல் 2019இல் ரஜினியின் 'பேட்ட' படம் வெளியாக உள்ளதால் படத்தின் வெளியீடு மீண்டும் தள்ளிப்போக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

நாளை வெளியாகவுள்ள தல அஜித்தின் விசுவாசம் செகண்ட் லுக் போஸ்டர்