Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

விசுவாசம் படத்தின் புதிய தகவல் மகிழ்ச்சியில் ரசிகர்கள்

thala 58 new updates

தற்பொழுது வலைத்தளத்தில் அஜித் ரசிகர்கள் தல 58வது படமான 'விசுவாசம்' படத்தின்  டைட்டிலை புது புது விதத்தில் வைரலாகி வருகின்றனர். மேலும் அஜித் படத்தில் கையளவிருக்கும்  புதுவித கெட்டப்பையும் ரசிகர்கள் பரப்பி வருகின்றனர். நான்காவது முறையாக இணைந்துள்ள சிறுத்தை சிவா - அஜித் கூட்டணியின் எதிர்பார்ப்புகள் ரசிகர்களிடம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் கடந்த நாட்களில் படத்தின் படப்பிடிப்பிற்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இது வரை படத்தின் டைட்டிலை மட்டும் வெளியிட்ட படக்குழு, மற்ற எந்த ஒரு தகவலையும் வெளிப்படுத்தாமல் சர்ப்ரைஸை அதிகளவு மேற்கொண்டு வருகின்றனர். இதன் காரணத்தினால் ரசிகர்களுக்கு எதிர்பார்ப்புகள் அதிகரித்து வருகிறது.     

தமிழ் திரையுலகம் முதல் தெலுங்கு திரையுலம் வரை அதிகளவு ரசிகர்கள் வட்டாரத்தை பிடித்தவர்களின் ஒருவரான அஜித்தின் படங்கள் என்றாலே ரசிகர்கள் மத்தியில் வெகுவான வரவேற்புகளும் எதிர்பார்ப்புகள் ஏற்பட்டுவிடும். இந்நிலையில் 'விசுவாசம்' படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் தருணத்தில் படத்தின் தயாரிப்பாளர் T.G.தியாகராஜன் சில கருத்துக்களை வெளியிட்டுள்ளார். அதில் கடந்த 3 மாதங்களாக படத்திற்கான திரைக்கதை அமைக்கும் பணியில் இயக்குனர் சிவா மற்றும் படக்குழு விறுவிறுப்பாக இறங்கி பணிபுரிந்து வருகின்றனர். இன்னும் சில நாட்களில் ஸ்க்ரிப்ட் பணி முடிவடையும் தருணத்தில் இருக்கிறது. இந்த பணி முடிந்ததும் படத்தில் நடிக்கவிருக்கும் நாயகி, இதர நடிகர் - நடிகைகள், படத்தின் மற்ற முக்கிய தகவலை வெளியிடுவதாக கூறியுள்ளார். 

விசுவாசம் படத்தின் புதிய தகவல் மகிழ்ச்சியில் ரசிகர்கள்