Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

விஸ்வாசத்தில் இணையும் யுவன்

uvan sankar raja music in viswasam

அஜித், சிறுத்தை சிவா கூட்டணியில் வெளியான வீரம், வேதாளம் படங்களுக்கு நல்ல வரவேற்பு  கிடைத்திருந்ததை தொடர்ந்து விவேகம் படத்திற்கும் வெற்றி கிடைத்தது. இதற்கு அடுத்து நான்காவது முறையாக இவர்களின் கூட்டணி மீண்டும் தொடங்கியுள்ளது. இந்நிலையில் விஸ்வாசம் என்ற படத்தின் டைட்டிலை நேற்று வெளியிட்ட சில மணி நேரத்தில் ரசிகர்கள் இந்திய அளவில் ட்விட்டரில் ட்ரெண்டாகி விட்டனர்.     

வேதாளம் படத்தினை தயாரித்த சத்ய ஜோதி பிலிம்ஸ் விஸ்வாசம் படத்தினை தயாரிப்பதாகவும், வேதாளம், விவேகம் படத்திற்கு இசையமைத்திருந்த அனிருத்தை தொடர்ந்து விஸ்வாசம் படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைப்பதாகவும் தகவல் வந்துள்ளது. அஜித் நடித்த ஏகன், மங்காத்தா, பில்லா 2, ஆரம்பம் உள்ளிட்ட பல படங்களில் யுவன் இசையமைத்திருப்பது குறிப்பிட்ட தக்கது.    

சமீபத்தில் யுவன் சங்கர் ராஜாவிடம் பேச்சு வார்த்தை நடந்ததாகவும், யுவன் இந்த படத்தில் இசையமைப்பதற்கு ஒப்பந்தம் அளித்ததாகவும் தகவல்கள் வந்துள்ளது. இது பற்றிய எவ்வித தகவலையும் வெளியிடாத படக்குழுவினர் விரைவில் இது சம்மந்தப்பட்ட அதிகார பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.   

விஸ்வாசத்தில் இணையும் யுவன்