Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

விஜயின் சர்கார் டீசர் வெளியீடு தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு

ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்திருந்த தளபதி விஜயின் 'சர்கார்' படத்தின் டீசர் வெளியீடு தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'சர்கார்' படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் பிரமாண்டமாக நடந்து முடிந்தது. இசைப்புயலின் இசையமைப்பில் உருவாகியுள்ள இந்த படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வருகின்றன. இந்நிலையில் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த 'சர்கார்' டீசர் குறித்த அறிவிப்பினை இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்ச்சர்ஸ் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது.

இந்த அறிவிப்பின்படி இந்த படத்தின் டீசர் வரும் அக்டொபர் 19ஆம் தேதி விஜயதசமி அன்று மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளது. இந்த படத்தின் டீஸருக்காக ரசிகர்கள் ஆர்வமுடன் காத்து கொண்டிருக்கின்றனர். தற்போது சமூக வலைத்தளங்களில் அஜித், விஜய், ரஜினி, சூர்யா ரசிகர்களின் மோதல் ஒவ்வொரு நாளும் வலுத்து வருகின்றது.

நடிகர்களின் ரசிகர்கள் அவர்களது டீசர் மற்றும் ட்ரைலர் போன்றவை வெளியாகும் போது மற்றவர்களை விட அதிக பார்வையாளர்களை கவர வேண்டும் என்ற நோக்கில் ஆர்வமாக ஈடுபட்டு வருகின்றனர். தற்போது விஜயின் 'சர்கார்' படத்தின் டீசர் அக்டோபர் 19இல் வெளியாகவுள்ள நிலையில் அறிவிப்பிற்கு முன்பே இந்த படத்தின் டீசர், சாதனை படைக்க வேண்டும் என்று முனைப்பாக ரசிகர்கள் காத்து கொண்டிருக்கின்றனர்.

விஜயின் சர்கார் டீசர் வெளியீடு தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு