தேனாண்டாள் தயாரிப்பில் சந்தானம் - டிசம்பரில் படப்பிடிப்பு
ராசு (Author) Published Date : Nov 20, 2017 19:50 ISTபொழுதுபோக்கு
நகைசுவை நாயகன் சந்தானம் தற்பொழுது நாயகனாக உருவெடுத்துள்ளார். இவர் நகைசுவை காலத்திலையே இளைஞர்கள் முதல் பெரியர்வர்கள் வரை தன்வசப்படுத்தியிருந்தார். இந்நிலையில் இவர் நடித்து வெளிவந்த வல்லவனுக்கும் புல்லும் ஆயுதம், இனி இப்படித்தான், தில்லுக்கு துட்டு போன்ற படங்கள் பேசப்படும் அளவிற்கு வெற்றியை தந்தது.
இதனை தொடர்ந்து சர்வர் சுந்தரம், சக்க போடு போடு ராஜா, ஓடி ஒடி உழைக்கணும், மன்னவன் வந்தபடி போன்ற நான்கு படங்களில் நடித்து வருவதில் பிசியாக இருத்த சந்தானம் தற்பொழுது இரண்டு படங்களின் படப்பிடிப்பை முடித்து விட்டார். இந்நிலையில் சக்க போடு போடு ராஜா படத்தின் ட்ரைலருக்கு அமோக வெற்றி பெற்றதோடு சிம்பு இசையினால் படத்திற்கு இன்னும் வரவேற்புகள் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் 'கடவுள் இருக்கான் குமாரு' படத்தினை இயக்கிய ராஜேஷின் இயக்கத்தில் சந்தானம் நடிக்க இருப்பதாக தகவல் வந்துள்ளது. இந்த படத்தினை புகழ் பெற்ற தேனாண்டாள் பிலிப்ஸ் தயாரிப்பதாகவும் படத்தின் படப்பிடிப்பு வருகிற டிசம்பர் மாதம் துவங்கயிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.