டிக் டிக் டிக் படத்தின் திரையரங்கு உரிமையை வாங்கிய பத்மாவதி
மோகன்ராஜ் (Author) Published Date : Jan 09, 2018 18:38 ISTபொழுதுபோக்கு
நாணயம், மிருதன், நாய்கள் ஜாக்கிரதை போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் சக்தி சவுந்தர் ராஜன் இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் 'டிக் டிக் டிக்'. மிருதன் படத்தை தொடர்ந்து இரண்டாவது முறையாக இவர்கள் கூட்டணி இணைந்துள்ளது. இந்த படம் இந்தியாவின் முதல் விண்வெளி சார்ந்த படம் என்பதால் நாளுக்கு நாள் எதிர்பார்ப்புகள் அதிகரித்து வருகிறது.
இந்த படத்தை அஞ்சாதே, பாண்டி, நான் அவன் இல்லை 2, மீகாமன் போன்ற படங்களை தயாரித்த ஹிதேஷ் ஐபக் நேமிசன்ட் ஐபக் நிறுவனம் சார்பில் தயாரித்துள்ளார். இந்த படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக வெளியிட உள்ளது. இந்த படத்தில் நிவேதா பெத்துராஜ், ஜெயபிரகாஷ், அருண், மன்சூர் அலி கான் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபத்திரத்தில் நடித்துள்ளனர். தமிழ் தெலுங்கு போன்ற மொழிகளில் வரும் ஜனவரி 26-இல் இந்த படம் வெளியாகவுள்ளது.
முன்னதாக இந்த படத்தின் போஸ்டர், டீசர், இசை போன்றவை ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தில் ஜெயம் ரவி மகனான ஆரவ் திரையுலகில் அறிமுகமாகிறார். இந்நிலையில் தெலுங்கில் வெளிவரவுள்ள இந்த படத்தின் திரையரங்கு உரிமையை எஸ்டிடீவி பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் சடலவாடா பத்மாவதி கைப்பற்றியிருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது. இந்த படத்தின் தெலுங்கு மோஷன் டீசர் சமீபத்தில் வெளியானது. இதனை தொடர்ந்து தற்போது இந்த படத்தில் தெலுங்கி போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.