Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

கலையரசன், ஆனந்தி நடிக்கும் 'டைட்டானிக்' படத்தின் பர்ஸ்ட் லுக்

titanic tamil movie first look

நடிகர் கலையரசன், தமிழில் அட்டகத்தி, முகமூடி, மதயானை கூட்டம், மெட்ராஸ், டார்லிங், டார்லிங் 2, உறுமீன், ராஜா மந்திரி, முப்பரிமாணம், கபாலி, உரு, அதே கண்கள், எய்தவன், தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். சினிமா திரையுலகில் நண்பன், உறவினர் போன்ற கதாபத்திரத்தில் நடித்த இவர் தற்போது கதாநாயகனாக சில படங்களில் நடித்து வருகிறார். இவர் தற்போது 'டைட்டானிக் : காதலும் கவுந்து போகும்' என்ற படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை ஜானகிராமன் இயக்குகிறார். இந்த படத்தை முண்டாசுப்பட்டி, காதலும் கடந்து போகும், மாயவன், இறுதி சுற்று, அதே கண்கள், இறைவி, சூது கவ்வும் போன்ற பல வெற்றி படங்களை கொடுத்த திருக்குமரன் என்டேர்டைன்மெண்ட் சார்பில் சிவி குமார் தயாரிக்கிறார்.

இந்த படத்திற்கு இசையமைப்பாளர் மற்றும் பாடகரான நிவாஸ் பிரசன்னா இசையமைத்துள்ளார். இந்த படத்தில் நடிகர் கலையரசனுக்கு ஜோடியாக 'கயல்' படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான ஆனந்தி நடிக்கிறார். இந்த படத்தின் மூலம் முதன் முறையாக இருவரும் ஜோடி சேரவுள்ளனர். மேலும் இந்த படத்தில் மற்றொரு கதாநாயகியாக ஆஷ்ணா சவேரி நடிக்கவுள்ளார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை ஜனவரி 1-இல் புத்தாண்டு தினத்தன்று வெளியிடுவதாக படக்குழு தெரிவித்துள்ளது.

கலையரசன், ஆனந்தி நடிக்கும் 'டைட்டானிக்' படத்தின் பர்ஸ்ட் லுக்