Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

இன்று உலக சூப்பர் ஸ்டார் ஜாக்கி சான் பிறந்த தினம்

ஜாக்கி சான் திரைத்துறையில் 56 வருடங்களாக நடித்து வருகிறார்.

இன்று உலகம் முழுவதும் பிரபலமாக அறியப்படும் நடிகர் ஜாக்கி சானின் பிறந்த நாள். ஜாக்கி சான் என்றாலே நமக்கு நினைவிற்கு வருவது குங் பூ (Kung Fu) மற்றும் அவருடைய காமெடி நிறைந்த சண்டை காட்சிகளும் தான். இவருடைய படங்களை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசித்து பார்க்கின்றனர். உலகம் முழுவதும் இவருடைய படங்கள் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்படுவதால் இவருடைய படங்களுக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

தமிழில் வெளியாகும் இவருடைய படங்களுக்கு டப்பிங் ஆர்ட்டிஸ்ட் முரளிகுமார் குரல் மாற்றம் செய்கிறார். ஜாக்கி சான், ஒரு நடிகராக மட்டுமல்லாமல் இவர் தற்காப்பு கலைஞர்,  இயக்குனர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், சண்டை பயிற்சி இயக்குனர், பாடகர், ஸ்டண்ட் நடிகர் என பல திறமைகளை தன்னுள் வைத்துள்ளார். 1954-இல் ஹாங்காங்கில் பிறந்த இவருக்கு தற்போது வயது 63.

இவர் திரைத்துறையில் அறிமுகமாகி  56 வருடங்கள் ஆகி விட்டது. 60 வயதை கடந்தும் இவர் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். கடந்த 1962-ஆம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக 'Big and Little Wong Tin Bar' என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான இவருடைய நடிப்பில் தற்போது வரை 170 படங்கள் வெளியாகியுள்ளது. இவருடைய நடிப்பில் இறுதியாக The Foreigner, Bleeding Steel, Namiya போன்ற படங்கள் வெளியானது.

இதனை தொடர்ந்து இவர் 6 படங்களில் நடித்து வருகிறார். இதில் ஒரு படம் இந்த ஆண்டும், இரண்டு படங்கள் அடுத்த ஆண்டும், இதர மூன்று படங்கள் 2020லும் வெளியாகவுள்ளது. ஜாக்கி சான் 'Lin Feng-Jiao' என்பவரை 1982-இல் மணந்தார். இவருக்கு ஜாயஸ் சான் என்ற ஒரு மகன் உள்ளார். இவருக்கு தற்போதைய வயது 36.

இன்று உலக சூப்பர் ஸ்டார் ஜாக்கி சான் பிறந்த தினம்