Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

டாம் குரூஸ் அசத்தும் மிஷன் இம்பாஸிபிள் 6 ட்ரைலர்

tom cruise mission impossible fallout official trailer

நடிகர் மற்றும் தயாரிப்பாளரான டாம் குருஸ், 1996-ஆம் ஆண்டு வெளியான 'Mission: Impossible' படத்தின் மூலம் ஹாலிவுட் திரையுலகில் பிரபலமானார். இவர் ஹாலிவுட்டில் அதிக சம்பளம் பெரும் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவர் தற்போது வரை மூன்று அகாடமி விருதுகளையும் மூன்று கோல்டன் குளோப் விருதுகளையும் வென்றுள்ளார். இவருடைய நடிப்பில் வெளியான 'Mission: Impossible' படம் இவருடைய நடிப்பில் தொடர்ந்து ஐந்து பாகமாக எடுக்கப்பட்டு உலகமெங்கும் மாபெரும் வெற்றி பெற்றது. இந்த வரிசையில் தற்போது டாம் குரூஸின் 'Mission: Impossible – Fallout' படம் உருவாகியுள்ளது.

இந்த படம் 'Mission: Impossible' வரிசையில் உருவாகியுள்ள ஆறாவது படமாகும். இந்த படத்தை திரைக்கதை எழுத்தாளர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரான கிறிஸ்டோபர் மெக்கரி எழுதி, இயக்கி, தயாரித்து வருகிறார். இவர் முன்னதாக டாம் குரூஸின் 'Jack Reacher', 'Mission: Impossible – Rogue Nation' போன்ற படங்களை இயக்கியுள்ளார். டாம் குருஸ் படம் என்றாலே கதையம்சமும், சாகசங்களும் தத்ரூபமாக இருக்கும். அந்த வகையில் இவரது நடிப்பில் வெளியான அனைத்து படங்களும் வசூல் சாதனையை குவித்து வந்தது. தற்போது 'Mission: Impossible – Fallout' படத்தின் ட்ரைலர் நேற்று வெளியாகியுள்ளது.

ட்ரைலர் வெளியான ஒரே நாளில் கிட்டத்தட்ட 2.5 லட்சம் பார்வையாளர்களை கடந்துள்ளது. இந்த படத்தை பேட் ரோபோட் ப்ரொடக்சன் மற்றும் ஸ்கை டான்ஸ் மீடியா போன்ற நிறுவனங்கள் சார்பில் டாம் குரூஸ், இயக்குனர், கிறிஸ்டோபர் மெக்கரி, JJ ஆப்ராம்ஸ், பிரையன் பார்க், டேவிட் எலிசன், டானா கோல்ட்பர்க் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். இந்த படத்தில் முந்தைய பாகங்களில் நடித்த ரெபேக்கா, விங் ராம்ஸ், சைமன் பெக், மிகளே மொனகன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படம் வரும் ஜூலை மாதம் 27-ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இந்த படத்தை பேரமௌன்ட் பிக்ச்சர்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக வெளியிட உள்ளது.

டாம் குரூஸ் அசத்தும் மிஷன் இம்பாஸிபிள் 6 ட்ரைலர்