Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

கோலிசோடா 2 படத்தின் விநியோக உரிமையை கைப்பற்றிய நிறுவனம்

trident arts right to golisoda 2

தமிழ் திரைப்படத்தின் சிறந்த ஒளிப்பதிவாளர்களின் ஒருவர் எஸ். டி. விஜய் மில்டன். இவர் முதல் முதலில் 'பிரியமுடன்' படத்தில் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்து திரையுலகில் அறிமுகமானார். அதன் பின்னர் நெஞ்சினிலே, ஆட்டோகிராப், போஸ், காதல், தீபாவளி, காதலில் விழுந்தேன், வழக்கு எண் : 18/9, கோலி சோடா, 10 எண்றதுக்குள்ள போன்ற பல வெற்றி படங்களை தயாரித்துள்ளார். இவர் தயாரிப்பு பணியில் ஈடுபடுவதை தொடந்து இயக்குனராகவும் சில படங்களில் பணியாற்றி வருகிறார். கடந்த 2006ம் ஆண்டில் வெளிவந்த 'அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது' என்ற நகைச்சுவைக் காதல் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதன் பின்னர் இவர் இயக்கிய 'கோலி சோடா' படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது. இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார்.     

கூடைப்பந்து விளையாட்டின் பின்னணியில் உருவாகி வரும் இப்படத்தில் இயக்குனர் மற்றும் நடிகரான சமுத்திரக்கனி வயதான தோற்றத்தில் வில்லன் கதாபாத்திரத்தை கையாண்டு வருகிறார். இயக்குனர் விஜய் மில்டன் இயக்கி ஒளிப்பதிவு செய்து வரும் இப்படத்தில் அவருக்கு சொந்தமான ‘ரஃப் நோட் புரொடக்ஷன்’ தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் படத்தினையும் தயாரித்துள்ளார். இப்படத்தின் மூலம் முதல் முறையாக தயாரிப்பாளராகவும் விஜய் மில்டன் அறிமுகமாகவிருப்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்  கெளதம் மேனன் காவல் துறை அதிகாரியாக வளம் வந்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு முடிவடைந்து போஸ்ட் ப்ரொடெக்சன் பணியில் படக்குழு ஈடுபட்டு வருகிறது. 

 அச்சு இசையமைக்க, தீபக் படத்தொகுப்பு பணில் ஈடுபட்டு வரும் இப்படத்தில் ஆடியோ டீசர், போஸ்டர் போன்றவை கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுவரும் இந்நிலையில் படத்தின் விநியோக உரிமையை ‘டிரைடென்ட் ஆர்ட்ஸ்’ நிறுவனதின் சார்பில் ரவி கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 'டிரைடென்ட் ஆர்ட்ஸ்' தயாரிப்பு நிறுவனம் சசிகுமாரின் 'வெற்றி வேல்', ராகவா லாரன்ஸின் 'சிவலிங்கா' போன்ற படத்தினை தயாரித்தும் 'விக்ரம் வேதா' படத்தின் விநியோக உரிமையை கைப்பற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.  

கோலிசோடா 2 படத்தின் விநியோக உரிமையை கைப்பற்றிய நிறுவனம்