Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

சூப்பர் ஸ்டாருடன் இணைந்த த்ரிஷா அதிகாரபூர்வ அறிவிப்பு

நடிகை த்ரிஷா ரஜினிகாந்தின் கார்த்திக் சுப்பராஜ் கூட்டணியில் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்துள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இயக்குனர் பா ரஞ்சித்தின் 'காலா' படத்திற்கு பிறகு ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்ததாக இயக்குனர் சங்கரின் பிரமாண்ட படமான '2.0' வெளியாக உள்ளது. நீண்ட வருடமாக இந்த படத்தின் டீசர் மற்றும் வெளியீட்டிற்காக ரசிகர்கள் காத்து கொண்டிருக்கின்றனர். ஆனால் டீசர் இப்போ வரும் அப்போ வரும் என எதிர்பார்த்து ரசிகர்கள் சலித்து போய் விட்டனர்.

2.0 படத்திற்கு பிறகு தற்போது ரஜினிகாந்த் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் நடிப்பில் கல்லூரி பேராசிரியர் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ரஜினிகாந்துடன் இணைந்து விஜய் சேதுபதி, சிம்ரன், நவாஸுதீன் சித்திக் போன்ற முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர்.

தற்போது இந்த படத்தில் த்ரிஷா, நயன்தாரா போன்ற நாயகிகள் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக தகவல் பரவி வருகிறது. இந்நிலையில் இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்க உள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பை சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். 

சூப்பர் ஸ்டாருடன் இணைந்த த்ரிஷா அதிகாரபூர்வ அறிவிப்பு