Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

இம்சை அரசன் 24ஆம் புலிகேசி பஞ்சாயத்து ஓவர் விரைவில் படப்பிடிப்பு ஆரம்பம்

காமெடி புயல் வடிவேலு நடிப்பில் வருவாகவுள்ள இம்சை அரசன் 24ஆம் புலிகேசி படத்தில் நடிக்க வடிவேலு சம்மதம் தெரிவித்துள்ளார்.

காமெடி புயல் வடிவேலு நடிப்பில் கடந்த 2006இல் இயக்குனர் சிம்பு தேவன் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் 'இம்சை அரசன் 23ஆம் புலிகேசி'. இந்த படத்தின் வெற்றியை அடுத்து இரண்டாம் பாகத்தை எடுக்க இயக்குனர் சங்கர் முடிவு செய்தார். இரண்டாம் பாகத்தையும் இயக்குனர் சிம்பு தேவன் இயக்க இயக்குனர் சங்கர் இந்த படத்தை தயாரிக்க உள்ளார்.  

இதன் பிறகு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டது. இந்த படத்தில் நடிப்பதற்கு வடிவேலுக்கு முன்பணம் கொடுக்கப்பட்டது. பின்னர் படப்பிடிப்பு தொடங்கிய பின்பு வடிவேலு சேட்டையை காட்ட ஆரம்பித்தார். முதலில் இந்த படத்தின் கதையை திருத்த சொல்லி, பின்னர் இந்த வசனத்தை பேசமாட்டேன், இந்த காட்சியில் நடிக்க மாட்டேன் என்றார் பின்பு படப்பிடிப்பிற்கு வருவதையே நிறுத்தி விட்டார்.

இதனால் இந்த படத்திற்காக சுமார் 6 கோடி செலவில் போடப்பட்ட செட் வீணானது. இதனை அடுத்து இயக்குனர் சங்கர் சார்பில் தயாரிப்பாளர் சங்கத்தில் வடிவேலு மீது புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரில் ஏற்பட்ட நஷ்டத்திற்கு வட்டியும் முதலுமாக 8 கோடியை வடிவேலு தரவேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

இதனை அடுத்து தற்போது வடிவேலு இறங்கி வந்து இயக்குனர் சிம்பு தேவன் சொல்லியபடியும், தயாரிப்பாளர் சங்கம் கூறுவதையும் ஏற்று நடித்து தருகிறேன் என்றும் பதிலளித்துள்ளார். இதனால் வடிவேலு ரசிகர்கள் 'இம்சை அரசன் ரிட்டர்ன்' என்று ஆனந்தம் அடைந்துள்ளனர். இருந்தாலும் 'அதற்கு பட்டபாடு தயாரிப்பாளருக்கு தாண்டா தெரியும்' என்று கேலி செய்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

இம்சை அரசன் 24ஆம் புலிகேசி பஞ்சாயத்து ஓவர் விரைவில் படப்பிடிப்பு ஆரம்பம்