Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

வரலட்சுமியின் புது வித முயற்சி

varalaksmi new movie

பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் சத்யா படத்தில் போலீஸ் கெட்டப்பில் நடித்து வந்த வரலட்சுமி சரத்குமாரின் இப்படம் இன்று வெளியிடப்பட்டது. இப்படத்தினை தொடர்ந்து நடிகை வரலட்சுமி சண்டகோழி, மிஸ்டர். சந்ரமௌளி போன்ற படங்களின் மூலம் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார். இந்நிலையில் இதற்கு அடுத்த படியாக ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தினை அறிமுக இயக்குநர் பிரியதர்ஷன் இயக்கவுள்ளர். இவர் மிஷ்கினிடம் உதவி இயக்குநராக பணியாற்றியது குறிப்பிட்ட தக்கது.

இந்த படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமாகும் வரலட்சுமியின் தங்கை பூஜா சரத்குமார் முக்கிய வேடத்தில் நடிப்பதாக தகவல் வந்துள்ளது. ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் உருவாக்கவுள்ளது. மேலும் இப்படத்தில் 'விக்ரம் வேதா' புகழ்  சாம்.சி.எஸ் இசையமைக்க உள்ளார். இந்நிலையில் இப்படத்திற்காக புது வித முயற்சியான பிரத்யேகமாக சிலம்பம் பயிற்சியில் வரலட்சுமி ஈடுபட்டு வருவதாகவும் தகவல் வந்துள்ளது. படத்தின்பஸ்ட் லுக் போஸ்டர் முன்னதாகவே வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றதோடு படத்தின் எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளது.   

வரலட்சுமியின் புது வித முயற்சி