Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

கிருஷ்ணாவின் வீரா வெளியீடு தேதி அறிவிப்பு

veera tamil movie release date

விழித்திரு படத்தினை தொடர்ந்து கிருஷ்ணா அதிரடி த்ரில்லர் படத்தில் நடித்து வருகிறார். ரவுடி கதாபாத்திரத்தில் ஹீரோவாக நடிக்கும் கிருஷ்ணனின் 'வீரா ' படத்தினை ராஜாராமன் இயக்குகிறார். ஐஸ்வர்யா மேனன் நாயகியாக நடிக்கும் இப்படத்தில் கருணாகரன் முக்கிய வேடத்தில் நடிப்பதாகவும்,  இவர்களுடன் இணைந்து ராஜேந்திரன், யோகி பாபு, தம்பி ராமையா, சரந்தீப், ஆடுகளம் நரேன், ராதா ரவி, கன்னி ரவி, கார்த்திக் நாகராஜன் உள்பட பலர் நடித்து வருவதாகவும் கூறுகின்றனர். இந்த படத்தில் காமெடிகள் அதிகளவு இடம் பெற்றிருப்பது குறிப்பிட தக்கது. 

எல்ரெட் குமார் தயாரிக்கும் இப்படத்தில் லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் ட்ரைலர் சில நாட்களுக்கு முன் வெளிவந்து நல்ல வரவேற்பினை பெற்றது. மேலும் படத்தில் இடம் பெற்றுள்ள குத்து பாடலுக்கும் வெகுவான வரவேற்புகள் கிடைத்து வருகிறது. வசந்த் மூவிஸ் & ஆரஞ்சு கிரேஷன் நிறுவனம் தயாரித்து உருவாக்கிய உள்ள இந்த படத்தினை வருகிற டிசம்பர் 8ம் தேதி வெளியிடுவதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.  

கிருஷ்ணாவின் வீரா வெளியீடு தேதி அறிவிப்பு