Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

வேலைக்காரன் படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு - நேரலை

velaikkaran movie press meet live

இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் வேலைக்காரன். இந்த படத்தில் மலையாள நடிகர் பகத் பாசில் தமிழுக்கு அறிமுகமாக இருக்கிறார். இந்நிலையில் தற்போது நடிகர் பகத் பாசில் நடித்து தேசிய விருதுகளை பெற்ற இரண்டு படங்களை தயாரித்த ஈ4 நிறுவனம் வேலைக்காரன் படத்தின் கேரளா வெளியீட்டு உரிமையை அதிக விலை கொடுத்து வாங்கியுள்ளது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடிக்கிறார். இந்த படத்தை 24ஏஎம் ஸ்டுடியோஸ் சார்பில் ஆர்டி ராஜா தயாரிக்கிறார்.

இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். வேலைக்காரன் படத்தின் பாடல்கள் வெளியாகி தற்போது வரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் நடிகர் பிரகாஷ் ராஜ், சினேகா, ஆர்ஜே பாலாஜி, தம்பி ராமையா, ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படம் வரும் டிசம்பர் 22-இல் கிறிஸ்துமஸ் விருந்தாக ரசிகர்களுக்கு அமைய உள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேரலையாக இன்று இன்னும் சற்று நேரத்தில் (மதியம்& 2.30) மணிக்கு துவங்குவதாக தெரிவித்துள்ளது.

வேலைக்காரன் படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு - நேரலை