Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

விஜய்யின் 62 படத்தில் இணையும் கீர்த்தி சுரேஷ்

keerthi suresh

மெர்சல் வெற்றியை தொடர்ந்து விஜய் தனது 62வது படத்தினை ஏஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். இதற்கு முன்னதாகவே கத்தி, துப்பாக்கி படங்களின் மூலம் இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. மூன்றாவது முறையாக இணைந்துள்ள இந்த கூட்டணியில் விவசாயம் சம்மந்தப்பட்ட  பிரச்சனைகள், அரசியல் சார்ந்த வசனங்கள் அதிகளவு இடம்பெறவுள்ளது.       

இந்த படத்திற்கான நாயகி, மற்ற நடிகர், நடிகைகள், மற்றும் தொழில் நுட்ப தேர்வுகள் நடைபெற்று இருக்கிறது. இந்நிலையில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இந்த படத்தில் நாயகியாக நடிக்கவிருக்கிறார் என்று முன்னதாகவே தகவல்கள் வெளிவந்திருந்தது. தற்பொழுது வந்த தகவலில் பைரவா படித்தில் நாயகியாக நடித்திருந்த கீர்த்தி சுரேஷ் மீண்டும் விஜய்யுடன் இணைய போவதாக தெரிகிறது. இதற்கான பேச்சி வார்த்தை படக்குழு நடத்திவருவதாக தகவல்கள் கசிந்துள்ளது.  

சன் பிக்ச்சர்ஸ் & லைக்கா ப்ரொடெக்சன் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் ஏ ஆர். ரகுமான் இசையமைக்க மலையாள திரையுலகின் புகழ் பெற்ற கிரீஸ் கங்காதரன் ஒளிப்பதிவு பணியில் ஈடுபட உள்ளார்.   

விஜய்யின் 62 படத்தில் இணையும் கீர்த்தி சுரேஷ்