Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

விஜய் 62 படத்தின் நாயகி இவர் தானா - மெர்சலாக்கும் ரசிகர்கள்

vijay 62 movie updates

மெர்சல் வெற்றிக்கு பிறகு விஜய் ஏஆர்.முருகதாஸ் உடன் இணைய உள்ளார். விஜயின் 62வது படத்தினை இயக்கவிருக்கும் முருகதாஸ் இது வரை பார்த்திராத புது வித கெட்டப்பில் விஜயின் தோற்றத்தில் படத்தினை எடுக்க இருக்கிறாராம். இரு வேடத்தில் நடிக்கும் விஜய் ஒன்று அதிரடியாகவும் மற்றொன்றில் மாற்று திறனாளியாகவும் நடிக்க இருப்பதாக தகவல் வந்துள்ளது.     

இந்நிலையில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிப்பதாக செய்திகள் கசிய துவங்கியுள்ளது .இது வரை படக்குழுவினர்களிடம் இருந்து எந்த வித அதிகார பூர்வ அறிவிப்பும் வரவில்லை. மேலும் மெர்சல் வெற்றியை கொண்டாடும் வகையில் துபாய்க்கு சென்றுள்ள விஜய், சென்னைக்கு வந்த பிறகு இதற்கான அறிவிப்புகள் முறையாக வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

அறம் படத்தின் மூலம் பல பாராட்டுகளையும், வரவேற்புகளையும் குவித்துள்ள நயன்தாரா விஜய் 62 படத்தில் இணைவது உறுதியானால் படம் பக்கா மாஸ் அளவிற்கு வெற்றி பெரும் என ரசிகர்கள் தரப்பிலிருந்து கருத்துகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.      

விஜய் 62 படத்தின் நாயகி இவர் தானா - மெர்சலாக்கும் ரசிகர்கள்