Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

தளபதி 62 மூலம் தமிழ் திரையுலகில் பாடகராக அறிமுகமாகும் விபின் அனேஜா

இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் தளபதி 62 படத்தில் பாலிவுட் பாடகர் விபின் அனேஜா அறிமுக பாடலை பாட உள்ளார்.

விஜய் 62 மூலம் தமிழ் திரையுலகில் பாடகராக அறிமுகமாகும் விபின் அனேஜாநடிகர் விஜய் தனது 62வது படத்திற்கு இயக்குனர் முருகதாஸுடன் இணைந்து நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் நாயகியாக பைரவா படத்தை தொடர்ந்து கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளார்.

இந்த படத்திற்கு இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் 'மெர்சல்' படத்தை தொடர்ந்து இந்த படத்திற்கும் இசையமைத்து வருகிறார். இசைப்புயலின் இசையமைப்பில் மெர்சல் படத்தின் பாடல்கள் ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது உருவாகி வரும் இந்த படத்திற்கும் இவருடைய இசைக்காக ஆவலுடன் காத்து கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் தற்போது இந்த படத்தின் அறிமுக பாடலை இந்தி பாடகரான விபின் அனேஜா பாடவுள்ளார். இவர் ஏஆர் ரஹ்மான் இசைநிகழ்ச்சியில் பின்னணி பாடல்களை பாடியுள்ளார். இந்தி பாடகரான இவர் இந்த படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் தளபதி படத்தின் மூலம் அறிமுகமாகவுள்ளார். சிறந்த தொழில்நுட்ப கலைஞர்களை கொண்டு பிரமாண்டமாக உருவாகி வரும் இந்த படம் இந்த ஆண்டு தீபாவளியில் வெளியாகவுள்ளது. 

தளபதி 62 மூலம் தமிழ் திரையுலகில் பாடகராக அறிமுகமாகும் விபின் அனேஜா