Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

விஜய் தேவரகொண்டாவின் நோட்டா ட்ரைலர் வெளியீடு தேதி அறிவிப்பு

இருமுகன் படத்திற்கு பிறகு இயக்குனர் ஆனந்த் சங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் நோட்டா படத்தின் ட்ரைலர் வெளியீடு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குனர் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகி வரும் படம் 'நோட்டா'. இயக்குனர் ஆனந்த் சங்கர் இயக்கத்தில் வெளியான முதல் படம் 'அரிமா நம்பி'. இந்த படத்திற்கு பிறகு விக்ரம் இரு கதாபாத்திரத்தில் நடித்திருந்த 'இருமுகன்' படத்தை இயக்கியிருந்தார். இந்த இரண்டு படங்களுக்கு பிறகு தன்னுடைய மூன்றாவது படத்திற்கு 'அர்ஜுன் ரெட்டி' மூலம் பிரபலமான தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்துள்ளார்.

இந்த படத்தின் மூலம் விஜய் தேவரகொண்டா தமிழுக்கு அறிமுகமாகிறார். இந்த படம் அரசியலை மையமாக வைத்து உருவாகி வருகிறது. மக்களின் போராட்டங்களின் போது அரசியல் வாதிகள் எப்படி அதனை கலவரமாக மாற்றுகின்றனர் என்பதை எடுத்துரைக்கும் இந்த படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்து வருகிறார்.

ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தின் ட்ரைலர் வெளியீடு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி இந்த படத்தின் ட்ரைலர் வரும் செப்டம்பர் 6ஆம் தேதி மாலை 4மணிக்கு வெளியாகவுள்ளது. மேலும் வரும் 5ஆம் தேதி இந்த படத்தின் சில நிமிடங்கள் அடங்கிய காட்சியையும் வெளியிட உள்ளனர். நடிகர் சத்யராஜ் மற்றும் நாசர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் இந்த படத்தின் வெளியீடு தேதியினையும் விரைவில் அறிவிக்க உள்ளனர்.

விஜய் தேவரகொண்டாவின் நோட்டா ட்ரைலர் வெளியீடு தேதி அறிவிப்பு