Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

சமூக சேவை மூலம் தனது படத்தை விளம்பரப்படுத்தும் விஜய் மில்டன்

கோலிசோடா 2 படத்தின் விளம்பரத்திற்காக இயக்குனர் விஜய் மில்டன் சமூக சேவையை கையில் எடுத்துள்ளார்.

ஆட்டோகிராப், காதல், தீபாவளி, காதலில் விழுந்தேன், வழக்கு எண் 18/9 போன்ற வெற்றி படங்களுக்கு ஒளிப்பதிவு பணிகளை அமைதி விஜய் மில்டன் விஜய், பிரசாந்த், விக்ரம் ஆகியோரின் ஏராளமான படங்களுக்கு ஒளிப்பதிவு அமைத்து 1998முதல் 20 வருடங்களாக திரைத்துறையில் உள்ளார். ஒளிப்பதிவாளரான இவர் இயக்குனராக 2006இல் அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படத்திற்கு பிறகு இவருடைய இயக்கத்தில் கோலி சோடா, 10 எண்றதுக்குள்ள, கடுகு போன்ற படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றது.

இவருடைய இயக்கத்தில் வெளியாகி ரசிகர்களின் பலத்த வரவேற்பினை பெற்ற கோலி சோடா படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகியுள்ளது. முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இல்லாமல் 'கோலிசோடா 2' முற்றிலும் மாறுபட்ட கதையுடன் உருவாகியுள்ளது. சமுத்திரக்கனி, இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன், செம்பன் வினோத் போஸ் போன்ற திரை நட்சத்திரங்களுடன் சில புதுமுகங்களை கொண்டு உருவாகியுள்ள இந்த படத்தினை ரப் நோட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பரத் சீனி தயாரித்துள்ளார்.

இந்த படத்தின் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் போன்ற அனைத்து பணிகளையும் இயக்குனர் விஜய் மில்டன் மேற்கொண்டுள்ளார். வரும் ஜூன் மாதம் 14-ஆம் தேதி வெளியாகவுள்ள இந்த படத்தின் ட்ரைலரை முன்னதாக படக்குழு வெளியிட்டது. இந்நிலையில் இந்த படத்தின் ப்ரோமோஷனுக்காக வித்தியாசமான முறையான விஜய் மில்டன் கையாண்டுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் "இன்றைய கால கட்டத்தில் ஒரு படத்தின் வெளியீட்டிற்கு ஆகும் செலவு கோடிகளை தாண்டி விடுகிறது.

இதனை தவிர்த்து விளம்பர செலவை மக்களுக்கு பயன்படும் விதமாக உபயோகப்படுத்தும் விதமாக உருவாக்கப்பட்டது தான் இந்த ஜிஎஸ்டி வண்டி. இதன் மூலம் பொது மக்களின் தேவைக்கேற்றவாறு, நீர், உணவு, மோர், இளநீர் போன்றவை இருக்கும். இது அவதிப்படும் பொது மக்களின் தாகம் தீர்க்கவும், பசியை போக்கவும் உதவியாக இருக்கும். இது சமூக சேவை என்றாலும் இதில் சுய நலமும் உள்ளது. ஆனால் விளம்பரத்திற்காக கோடியாய் செலவழிப்பதை இது போன்ற செயல்களில் மக்களுக்கு உதவி செய்யலாம் என தோன்றியது." என்று அவர் தெரிவித்துள்ளார்.

சமூக சேவை மூலம் தனது படத்தை விளம்பரப்படுத்தும் விஜய் மில்டன்