Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

காந்தி ஜெயந்தியில் சர்கார் படத்தின் பிரமாண்ட இசை வெளியீடு

விஜயின் சர்கார் படத்தின் இசை வெளியீட்டு தேதி குறித்த அறிவிப்பினை படக்குழு வெளியிட்டுள்ளது.

துப்பாக்கி, கத்தி படங்களை தொடர்ந்து இயக்குனர் ஏஆர் முருகதாஸ் மற்றும் விஜய் கூட்டணியில் தற்போது பிரமாண்டமாக உருவாகி வரும் படம் 'சர்கார்'. கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடித்து வரும் இந்த படத்திற்கு இசைப்புயல் இசையமைத்து வருகிறார். இந்த படத்தின் மூலம் முதன் முறையாக இயக்குனர் ஏஆர் முருகதாஸ் மற்றும் ஏஆர் ரஹ்மான் கூட்டணி இணைந்துள்ளது.

முன்னதாக விஜயின் உதயா, அழகிய தமிழ்மகன் மற்றும் மெர்சல் போன்ற படங்களுக்கு இசையமைத்துள்ள ஏஆர் ரஹ்மான் இந்த படத்தின் மூலம் நான்காவது முறையாக விஜய் படத்திற்கு இசையமைத்து வருகிறார். சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தில் வரலட்சுமி, யோகி பாபு, பிரேம் குமார், ராதா ரவி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். முன்னதாக இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்ட நிலையில் தற்போது இந்த படத்தின் இசை வெளியீட்டு தேதி குறித்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

இந்த அறிவிப்பின் படி இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் அக்டொபர் 2ஆம் தேதியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பிரமாண்டமாக நடைபெற உள்ளது. நேற்று வெளியிட்ட இந்த அறிவிப்பில் ரசிகர்கள் சர்கார் படத்தின் டீசருக்காக காத்திருந்தனர். ஆனால் படக்குழு படத்தின் இசை வெளியீடு குறித்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதியில் தீபாவளியில் வெளியாகவுள்ள இந்த படத்தின் டீசர் குறித்த அறிவிப்பினையும் படக்குழு விரைவில் வெளியிட உள்ளது.

காந்தி ஜெயந்தியில் சர்கார் படத்தின் பிரமாண்ட இசை வெளியீடு