மெர்சலை போலவே சர்காருக்கும் வலுக்கும் எதிர்ப்புகள்
வேலுசாமி (Author) Published Date : Nov 08, 2018 17:50 ISTபொழுதுபோக்கு
இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் கடந்த தீபாவளி அன்று வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினையும் எதிர்ப்புகளால் நல்ல வசூலையும் குவித்து வரும் படம் 'சர்கார்'. தனது ஓட்டை கள்ள ஒட்டு போட்டுவிட்டதை ஏற்றுக்கொள்ள முடியாத இந்திய குடிமகனின் 'ஒரு விரல் புரட்சி' தான் சர்கார். அரசியலை மையமாக வைத்து வெளியாகியுள்ள இந்த படத்திற்கு தற்போது அதிமுகவினரிடையே கடும் எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றது.
இந்த படத்தில் செக்சன் 49-P மற்றும் அரசாங்கம் தரும் இலவச பொருட்கள் போன்றவற்றை மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இந்த படம் வெளியாகியுள்ளது. சமூக வலைத்தளங்களில் செக்சன் 49-P என்ற வார்த்தை மிகவும் வைரலாகி வருகின்றது. பொதுவாக விஜய் படங்கள் என்றாலே சர்ச்சைகள் கிளம்புவது வழக்கம் தான், இந்த சர்ச்சைகளை மூலம் விஜயின் படங்களும் நல்ல வசூலையும் குவித்து வருகின்றது.
கடந்த ஆண்டில் மெர்சலுக்கு ஏற்பட்ட சர்ச்சையால் அந்த படம் மாபெரும் வெற்றி அடைந்து உலகம் முழுவதும் பேசப்பட்டது. தற்போது மெர்சலை போல 'சர்கார்' படத்திற்கும் அரசியல்வாதிகளிடையே எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன. மதுரை, கோவை போன்ற பல இடங்களில் சர்கார் படத்தின் காட்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது தவிர தியேட்டர் முன்பு போடப்பட்டுள்ள பேனர்களும் கிழித்தெறிந்து அதிமுகவினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.