Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

தளபதி விஜயின் சர்கார் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு

தளபதி விஜயின் சர்கார் படத்தின் டீசர் குறித்த அப்டேட்டை இன்று மாலை சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் வெளியிட உள்ளது.

மெர்சல் படத்தின் வெற்றிக்கு பிறகு தளபதி விஜய், இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் 'சர்கார்' படத்தில் நடித்து வருகிறார். முன்னதாக இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்களை படக்குழு வெளியிட்டது. இந்த போஸ்டர்களும் ரசிகர்களிடம் வரவேற்பும், விமர்சனங்களுக்கும் உள்ளானது.

இசைப்புயல் இசையமைத்து வரும் இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, ராதாரவி, பாலா கருப்பையா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் சார்பில் கலாநிதி மாறன் தயாரித்து வரும் இந்த படத்தின் பணிகள் தற்போது பலத்த எதிர்பார்ப்புடன் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

தற்போது சர்கார் படத்தின் டீசர் விநாயகர் சதுர்த்தியில் வெளியாகலாம் என்று தகவல் வந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் சர்கார் படத்தின் அடுத்த அப்டேட் குறித்த தகவலை இன்று மாலையில் வெளியிட உள்ளதாக சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இன்று வெளிவரவுள்ள இந்த அறிவிப்பில் சர்கார் படத்தின் டீசர் மற்றும் இசை வெளியீடு குறித்த அறிவிப்பாக இருக்கலாம் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

தளபதி விஜயின் சர்கார் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு