சர்ச்சையால் சர்காரில் நீக்கப்பட்ட வசனங்கள் மற்றும் காட்சிகள்
வேலுசாமி (Author) Published Date : Nov 09, 2018 18:09 ISTபொழுதுபோக்கு
நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் கடந்த தீபாவளியில் வெளியான 'சர்கார்' படத்திற்கு தொடர்ந்து அரசியல்வாதிகளிடையே எதிர்ப்புகள் வலுத்து கொண்டே செல்கின்றது. இதனால் தற்போது திரையில் ஓடி கொண்டிருக்கும் 'சர்கார்' படத்தினை மீண்டும் தணிக்கை குழுவிற்கு அனுப்பி சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும் என்று அதிமுகவினர் வலியுறுத்தினர்.
இதன்படி தற்போது இந்த படம் தற்போது மீண்டும் தணிக்கை குழுவிற்கு அனுப்பி சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கியுள்ளனர். இந்த படத்தில் மேடையில் விஜய் மற்றும் பால கருப்பையா ஆகியோர் உரையாடும் காட்சிகள், இயக்குனர் ஏஆர் முருகதாஸ் அரசாங்கம் தரும் இலவச பொருட்களை (டிவி, மிக்சி) போன்றவற்றை எரிக்கும் காட்சிகள் மற்றும் மருத்துவமனையில் அரசு துறைகளால் மக்களுக்கு ஏற்படும் துயரங்களை விஜய் எடுத்துரைக்கும் காட்சிகள் போன்றவற்றால் அதிமுகவினரிடம் கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது.
இதனால் இந்த படத்தினை மறு தணிக்கை செய்து இந்த படத்தில் இடம்பெறும் சர்ச்சைக்குரிய 6 வினாடி காட்சிகள் மற்றும் வசனங்களை தணிக்கை குழு நீக்கியுள்ளது. ஒரு முறை தணிக்கை குழுவிற்கு சென்ற படத்தினை மீண்டும் தணிக்கை குழுவிற்கு அனுப்ப சொன்னதால் இந்த படத்திற்கு ஆதரவாக ரஜினிகாந்த், கமல் ஹாசன் உள்ளிட்ட ஏராளமான சினிமா பிரபலங்களும் களமிறங்கியுள்ளனர்.