Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

விஜயின் சர்கார் படக்குழுவின் சிங்கிள் டிராக் வெளியீடு தேதி அறிவிப்பு

சர்கார் படத்தின் சிங்கிள் டிராக் வெளியீடு தேதியை சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகி வரும் படம் 'சர்கார்'. சன் பிக்ச்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படம் இந்த ஆண்டு தீபாவளியில் வெளியாகவுள்ளது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவையும் வரும் அக்டொபர் 2ஆம் தேதியில் பிரமாண்டமாக நடத்த உள்ளனர். இந்நிலையில் தற்போது இந்த படத்தின் சிங்கிள் டிராக் பாடல் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பினை சன் பிக்ச்சர்ஸ் வெளியிட்டுள்ளது.

இந்த அறிவிப்பின்படி இந்த படத்தின் சிங்கிள் டிராக் பாடலை வரும் செப்டம்பர் 24ஆம் தேதியில் மாலை 6மணிக்கு வெளியிட உள்ளனர். மெர்சல் படத்திற்கு பிறகு இந்த படத்திற்கும் இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். இவருடைய இசையமைப்பில் மெர்சல் படத்தின் பாடல்கள் நல்ல வரவேற்பினை பெற்றுள்ள நிலையில் 'சர்கார்' படத்தின் பாடல்களுக்காகவும் ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். 

விஜயின் சர்கார் படக்குழுவின் சிங்கிள் டிராக் வெளியீடு தேதி அறிவிப்பு