Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

கத்தி ட்ரைலர் வெளியான அதே நாளில் சர்கார் டீசர்

தளபதி விஜயின் சர்கார் டீசர், கத்தி ட்ரைலர் வெளியான அதே நாளில் வெளியாகவுள்ளது.

இயக்குனர் ஏஆர் முருகதாஸ் மற்றும் நடிகர் விஜய் கூட்டணியில் உருவாகியுள்ள 'சர்கார்' வரும் தீபாவளியில் கோலாகலமாக வெளியாகவுள்ளது. இந்த படத்திற்காக ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர். முன்னதாக இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா காந்தி ஜெயந்தியில் பிரமாண்டமாக நடந்து முடிந்தது.

இந்த விழாவில் சர்கார் டீசர் வெளியிடும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருவதாக இயக்குனர் ஏஆர் முருகதாஸ் தெரிவித்திருந்தார்.இதன் பிறகு 'சர்கார்' படத்தின் டீசர் வெளியீடு குறித்த அறிவிப்பினை சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டது. இந்த அறிவிப்பின்படி இந்த படத்தின் டீசர் வரும் அக்டொபர் 19ஆம் தேதியில் வெளியாகவுள்ளது. ஏற்கனவே ஏஆர் முருகதாஸ் விஜய் கூட்டணியில் கடந்த 2014இல் வெளியாகி மாபெரும் வெற்றி அடைந்த 'கத்தி' படத்தின் டிரைலரும் இதே அக்டொபர் 19ஆம் தேதியில் தான் வெளியானது. இதன் பிறகு மீண்டும் அதே கூட்டணியில் உருவாகியுள்ள 'சர்கார்' டீசரும் அக்டொபர் 19ஆம் தேதியில் வெளியாவது ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது. இந்த டீசர் வெளியானால் அடுத்த 24 மணிநேரத்தில் 1 மில்லியன் பார்வையாளர்களை கடக்க வேண்டும் என்று விஜய் ரசிகர்கள் முனைப்பாக உள்ளனர். இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில் இந்த படத்தின் டீசருக்காக ஆர்வமுடன் காத்து கொண்டிருக்கின்றனர்.

கத்தி ட்ரைலர் வெளியான அதே நாளில் சர்கார் டீசர்