Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

வெளியானது விஜய் சேதுபதியின் 96 படத்தின் இசை மற்றும் ட்ரைலர்

விஜய் சேதுபதி த்ரிஷா நடிப்பில் உருவாகி வரும் 96 படத்தின் இசை மற்றும் ட்ரைலரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

நடிகர் விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா ஆகியோரது நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் '96'. காதலை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த படத்திற்கு 1996ஆம் ஆண்டை குறிப்பிடும் விதமாக இந்த படத்திற்கு '96' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தின் ஒளிப்பதிவாளரான பிரேம் குமார் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தினை மெட்றாஸ் என்டர்ப்ரைசஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

முன்னதாக இந்த படத்தின் டீசர் மற்றும் சிங்கிள் பாடலை படக்குழு வெளியிட்டுள்ள நிலையில் தற்போது இந்த படத்தின் இசை மற்றும் ட்ரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. விஜய் சேதுபதியின் 'சீதக்காதி' படத்திற்கு இசையமைத்து வரும் இசையமைப்பாளர் கோவிந்த் மேனன் இந்த படத்திற்கும் இசையமைத்துள்ளார்.

இவருடைய இசையமைப்பில் உருவாகியுள்ள மெலடி பாடல்கள் ரசிகர்களை கவரும் விதமாக அமைந்துள்ளது. இந்த பாடல்களை பாடகி சின்மயி, பிரதீப் குமார், கெளரி TP, கோவிந்த் வசந்தா ஆகியோர் பாடியுள்ளனர். முன்னதாக காதலே காதலே என்ற பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்ற நிலையில் தற்போது இந்த படத்தின் 7 பாடல்கள் மற்றும் ட்ரைலரையும் வெளியிட்டுள்ளது.

வெளியானது விஜய் சேதுபதியின் 96 படத்தின் இசை மற்றும் ட்ரைலர்