Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

சயிரா நரசிம்ம ரெட்டி படப்பிடிப்பில் இணைந்துள்ள விஜய் சேதுபதி கிச்சா சுதீப்

நடிகர் விஜய் சேதுபதி மற்றும் சுதீப் ஆகியோர் சைரா நரசிம்ம ரெட்டி படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளனர்.

தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான சுரேந்திர ரெட்டி இயக்கத்தில் உருவாகி வரும் சரித்திர படம் 'சயிரா நரசிம்ம ரெட்டி'. நடிகர் மற்றும் தயாரிப்பாளரான ராம்சரணின் கோனிடேலா ப்ரொடக்சன் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படம் மிகுந்த பொருட்செலவில் பிரமாண்டமாக உருவாகி வருகிறது.

இந்த படத்திற்காக பாலிவுட், டோலிவுட் மற்றும் கோலிவுட் என இந்திய சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்கள் பட்டாளத்தையே திரட்டியுள்ளனர்.இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. ஜியார்ஜியாவில் நடைபெற்று வரும் இந்த படப்பிடிப்பில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் கிச்சா சுதீப் ஆகியோர் இணைந்துள்ளனர். இருவரும் இணைந்து படப்பிடிப்பில் எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

இந்த படத்தில் விஜய் சேதுபதி 'ஒபாயா' என்ற கதாபாத்திரத்திலும், நடிகர் கிச்சா சுதீப் 'அவுக்கு ராஜா' என்ற கதாபாத்திரத்திலும் நடித்து வருகின்றனர்.இந்த படம் நடிகர் விஜய் சேதுபதி தெலுங்கு சினிமாவிற்கு அறிமுகமாகவுள்ள முதல் படம். இந்த படத்தில் சிரஞ்சீவி, நயன்தாரா, அமிதாப் பச்சன், ஜெகபதி பாபு, தமன்னா, நாசர், பிரகாஷ் ராஜ், பூனம் கார் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

தற்போது ஜியார்ஜியாவில் நடைபெற்று வரும் படப்பிடிப்பில் சுமார் 2500 நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த படத்திற்காக பிரமாண்ட செட் அமைத்து படமாக்கி வருகின்றனர். மேலும் தற்போது அமிதாப் பச்சனின் பிறந்த நாள் பரிசாக அவருடைய கதாபாத்திரம் குறித்த மோஷன் போஸ்டரையும் படக்குழு வெளியீட்டு அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.

சயிரா நரசிம்ம ரெட்டி படப்பிடிப்பில் இணைந்துள்ள விஜய் சேதுபதி கிச்சா சுதீப்