Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

சூப்பர் ஸ்டாருக்கு தம்பியாக நடிக்கும் விஜய் சேதுபதி

சூப்பர் ஸ்டாருக்கு தம்பியாக நடிக்கும் விஜய் சேதுபதி

ரஜினி நடிப்பில் ‘காலா’ படம் வருகிற ஏப்ரல் 27-ஆம் தேதி வெளியாகவுள்ளது. நடிகர் ரஜினி கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் அடுத்ததாக நடிக்க உள்ளார். இந்த படத்தின் மூலம் இசையமைப்பாளர் அனிருத் முதல் முறையாக ரஜினியுடன் இணைந்துள்ளார். இந்த படத்தில் நடிக்கவுள்ள இதர நடிகர்-நடிகைகள், தொழில் நுட்பகலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.

முன்னதாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளிவந்த ‘பீட்சா’, ‘இறைவி’ போன்ற படங்களில் விஜய்சேதுபதி நடித்துள்ளார். ஆக, ரஜினி நடிக்கும் இந்த படத்திலும் விஜய்சேதுபதி நடிக்க உள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது. அவர் வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கலாம் என்றும் தகவல் தெரிவிக்கின்றன. 

இதனை அடுத்து தற்போது இந்த படத்தில் ரஜினியின் தம்பி கதாபாத்திரத்தில் விஜய்சேதுபதி நடிக்க உள்ளதாக புதிய தகவல் பரவி வருகிறது. உண்மையாகவே, அவர் இந்த படத்தில் நடிக்கிறாரா? என்னவாக நடிக்கிறார்? என்ற அறிவிப்பை படக்குழு தெரிவித்தால் மட்டுமே உறுதியாகும். 

சூப்பர் ஸ்டாருக்கு தம்பியாக நடிக்கும் விஜய் சேதுபதி