Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

இரண்டாவது முறையாக நயன்தாராவிற்கு ஜோடி சேரும் விஜய் சேதுபதி

vijay sethupathi nayanthara new movie

'டிமான்டி காலனி' படத்தை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் 'இமைக்கா நொடிகள்'. இந்த படத்தில் அதர்வா, நயன்தாரா, அனுராக் கஷ்யப், ராசி கண்ணா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்த படத்தை கேமியோ பிலிம்ஸ் இந்தியா சார்பில் சி.ஜே.ஜெயக்குமார் தயாரிக்கிறார். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்தை ஹிப் ஹாப் தமிழா இசையமைக்கிறார். இந்த படத்தின் இயக்குனர் அஜய் ஞானமுத்து கதை மற்றும் திரைக்கதை பணிகளையும் மேற்கொண்டுள்ளார். 

நடிகை நயன்தாரா கதாநாயகியாக நடிக்கும் இந்த படத்தில் நடிகர் அதர்வா மற்றும் இயக்குனர் அனுராக் கஷ்யப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஹிந்தி திரையுலகில் முன்னணி இயக்குனரான அனுராக் கஷ்யப் முதன் முதலாக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாகிறார். மேலும் இந்த படத்தில் நயன்தாரா ஜோடியாக சிறப்பு தோற்றத்தில் நடிக்க பல கதாநாயகனை தேடி வந்துள்ளார் இயக்குனர் அஜய் ஞானமுத்து. இந்நிலையில் தற்போது நயன்தாராவிற்கு ஜோடியாக நடிகர் விஜய் சேதுபதியை ஒப்பந்தம் செய்துள்ளார். இவர் ஏற்கனவே 'நானும் ரவுடிதான்' படத்தில் நயன்தாராவிற்கு ஜோடி சேர்ந்தது குறிப்பிடத்தக்கது. 

இரண்டாவது முறையாக நயன்தாராவிற்கு ஜோடி சேரும் விஜய் சேதுபதி