Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

ரசிகர்களுக்கு இரட்டை விருந்தளிக்கும் விஜய் சேதுபதி

oru nalla naal paathu solren audio launch and junga first look teaser in natchathira vizha

நடிகர் விஜய் சேதுபதி 2010-ஆம் ஆண்டு வெளியான 'தென்மேற்கு பருவக்காற்று' என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். அதற்கு முன்பு துபையில் கணக்காளராக பணியாற்றிய இவர் அந்த வேலை பிடிக்காததால் நடிப்பு துறையை தேர்ந்தெடுத்தார். நிழல் படக்காரர் ஒருவர் இவருடைய முகம் நிழல் படங்களில் மிகவும் அழகாக தெரியக்கூடிய ஒன்று என்று தெரிவித்துள்ளார். அது அவருக்கு ஊக்கமாக இருந்துள்ளது. இவர் முதலில் பெண் என்ற தொலைக்காட்சி தொடரிலும், பின்னர் நாளைய இயக்குனர் நிகழ்ச்சிக்காக பல குறும்படங்களில் நடித்துள்ளார். பீட்சா பட இயக்குனர் கார்த்திக் சுப்புராஜுடன் இணைந்து பல குறும்படங்களில் பணியாற்றியுள்ளார். சிறந்த நடிகருக்கான விருதை நார்வே குறும்பட தமிழ்த் திரைப்பட விழாவில் பெற்றுள்ளார். 

இயக்குநர் செல்வராகவன் 'புதுப்பேட்டை' படத்துக்கு திறன் தேர்வு வைத்ததில் கலந்து கொண்டு தனுசுக்கு நண்பனாக நடிக்கும் வாய்ப்பை பெற்றார். இதனை அடுத்து பிரபு சாலமனின் 'லீ' படத்திலும், சுசீந்திரனின் 'வெண்ணிலா கபடி குழு', 'நான் மகான் அல்ல' போன்ற படங்களில் சிறு கதாபத்திரத்தில் நடித்துள்ளார். இயக்குநர் சுசீந்திரன் தன்னை முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்க வைத்து தன் கனவு மெய்ப்பட காரணமாக இருந்தவர் என்று அவர் தெரிவித்துள்ளார். சுசீந்திரன் இவரை 'தென்மேற்கு பருக்காற்று' இயக்குநர் சீனு ராமசாமியிடம் அறிமுகப்படுத்தினார். பின்பு, சீனு ராமசாமி விஜய் சேதுபதிக்கு அப்படத்தில் முன்னணி கதாப்பாத்திரம் வழங்கினார். இதனை அடுத்து இவர் 'பீட்ஸா', 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்', 'சூது கவ்வும்' போன்ற படங்களில் நடித்து வசூல் ரீதியாகவும், ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றார். இதனை அடுத்து இவர் நடிப்பில் வெளிவந்த அனைத்து படங்களும் வெற்றிகரமாக ஓடியது. 

இவர் நடிப்பில் வெளிவந்த 'தர்மதுரை', 'விக்ரம் வேதா' படங்கள் 100 நாட்களை கடந்து பெரும் புகழை தேடித்தந்தது. இவர் தற்போது ஏராளமான படங்களில் தற்போது பிசியாக நடித்து வருகிறார். இதில் 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்', 'ஜூங்கா', '96' போன்ற படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. முன்னதாக மலேசியாவில் நடைபெறவுள்ள நட்சத்திர விழாவில் 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' படத்தின் இசையை வெளியிடுவதாக படக்குழு தெரிவித்தது. இதனை அடுத்து இவர் நடிப்பில் வெளிவரவுள்ள 'ஜூங்கா' படத்தின் பர்ஸ்ட் லுக் டீசரையும் நட்சத்திர விழாவில் வெளியிடுவதாக படக்குழு தெரிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

ரசிகர்களுக்கு இரட்டை விருந்தளிக்கும் விஜய் சேதுபதி