Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

ஏப்ரலில் துவங்கவுள்ள விஜய் சேதுபதியின் மாமனிதன்

vijay sethupathi mamanidhan shoot from april

தென்மேற்கு பருவ காற்று, தர்மதுரை, இடம் பொருள் ஏவல் படத்தினை தொடர்ந்து நான்காவது முறையாக இணைந்துள்ள சீனு ராமசாமி மற்றும் விஜய் சேதுபதி இக்கூட்டணியின் படத்திற்கு 'மாமனிதன்' என்று தலைப்பினை வைத்துள்ளனர். இந்த படம் தற்பொழுது நிலவி வரும் அரசியலை மையமாக கொண்டு உருவாக்கவிருக்கிறது. படத்தின் ப்ரீ -ப்ரொடெக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்நிலையில் படத்தின் படப்பிடிப்பை வருகிற ஏப்ரல் மாதத்தில் துவங்கவிருப்பதாக படக்குழு அதிகார பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.  

இந்நிலையில் இசைஞானி குடும்பத்தில் உள்ள இசையமைப்பாளர்கள் யுவன் சங்கர் ராஜா, கார்த்திக் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கும் பணியில் இணைந்துள்ளனர். இவர்களுடன் இளையராஜாவும் இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. மூன்று இசையமைப்பாளர்களும் முதல் முறையாக இணைந்துள்ள கூட்டணியில் பல பாடல்கள் இடம்பெற இருப்பதாகவும் தகவல் வந்துள்ளது. இவர்களில் ஒருவர் இசையமைத்தாலே ரசிகர்களிடம் இருந்து வெகுவான வரவேற்பு படத்திற்கு கிடைத்து வரும் இந்நிலையில் மூவரும் இணைந்து இசையமைக்க இருப்பதால் படத்தின் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்து வருகிறது. இந்த படத்தினை யுவன் சங்கர் ராஜா தயாரிக்கவும் திட்டமிட்டுள்ளார். 

இந்த படத்தின் இசையமைக்கும் பணியில் இணையவிருப்பதாக யுவன் சங்கர் ராஜா அவரது ட்விட்டரில் பதிவு செய்து தகவலை வெளியிட்டிருந்தார். மேலும் இவர் இசையில் 125வது படமாக விஷாலின் 'இரும்பு திரை' படம் வெளிவரவிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தினை தொடர்ந்து தனுஷின் மாரி 2, சூர்யாவின் 36வது படம் போன்றவைகளில் இசையமைக்க இருக்கிறார்.      

ஏப்ரலில் துவங்கவுள்ள விஜய் சேதுபதியின் மாமனிதன்