Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

நடிகர் விஜய் சேதுபதியின் சீதக்காதி வெளியீடு தேதி

விஜய் சேதுபதியின் 25வது படமான சீதக்காதி வெளியீடு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் இந்த ஆண்டில் மட்டும் ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன், ஜூங்கா, இமைக்கா நொடிகள், செக்க சிவந்த வானம் மற்றும் 96 என 5 படங்கள் வெளியாகியுள்ளது. இதில் ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் மற்றும் ஜூங்கா படங்களுக்கு ரசிகர்களிடம் போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. ஆனால் இமைக்கா நொடிகள், செக்க சிவந்த வானம் மற்றும் கடந்த 4ஆம் தேதி வெளியான '96' போன்ற படங்களுக்கு ரசிகர்களிடம் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது.

ஒரு படத்தின் வெற்றியை ரசிகர்கள் கொண்டாடுவதற்குள் அடுத்தடுத்து விஜய் சேதுபதியின் படங்கள் வெளியாகி கொண்டே வருகின்றன. இதனால் ரசிகர்கள் டிக்கெட் வாங்க கூட காசில்ல..போதும்.. என பேஸ்புக் மற்றும் டிவிட்டரில் மீம்ஸ்களை வெளியீட்டு வருகின்றனர். இவர் தற்போது தெலுங்கில் பிரமாண்டமாக உருவாகி வரும் 'சைரா நரசிம்ம ரெட்டி' படத்தில் நடித்து வருகிறார்.

இவருடைய கதாபாத்திரம் குறித்த புகைப்படம் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. இந்நிலையில் இயக்குனர் பாலாஜி தரணீதரன் இயக்கத்தில் உருவாகி வரும் 'சீதக்காதி' படத்தின் வெளியீடு தேதியும் தற்போது வெளியாகியுள்ளது. இதன்படி இந்த படத்தினை வரும் நவம்பர் 16ஆம் தேதியில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. விஜய் சேதுபதியின் 25வது படமான இந்த படத்தில் 80 வயது முதியவர் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் பாடலை வரும் 15ஆம் தேதியில் படக்குழு வெளியிட உள்ளது.

நடிகர் விஜய் சேதுபதியின் சீதக்காதி வெளியீடு தேதி