வெளியானது விஜய் சேதுபதியின் சீதக்காதி செகண்ட் லுக் போஸ்டர்
வேலுசாமி (Author) Published Date : Oct 17, 2018 18:25 ISTபொழுதுபோக்கு
96 படத்தின் வெற்றிக்கு பிறகு விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் சூப்பர் டீலக்ஸ், சீதக்காதி, பேட்ட, சைரா நரசிம்ம ரெட்டி போன்ற படங்கள் அடுத்ததாக வெளியாகவுள்ளது. இதில் 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' படத்தின் இயக்குனரான பாலாஜி தரணீதரன் இயக்கத்தில் உருவாகி வரும் 'சீதக்காதி' படம் வரும் நவம்பர் மாதத்தில் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த படத்தில் விஜய் சேதுபதி 'அய்யா' என்ற முதியவர் கதாபாத்திரத்திலும், இளைஞனாகவும் இரண்டு கதாபாத்திரத்தை ஏற்று நடித்து வருகிறார். முன்னதாக இந்த படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளியான நிலையில் இந்த படத்தின் செகண்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டரில் விஜய் சேதுபதி நாடக கலைஞராக ராமன் தோற்றத்தில் உள்ளார். தொடர்ந்து வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து குறுகிய காலத்தில் முன்னணி நடிகராக வளர்ந்து வரும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் இந்த படம் இவருடைய 25வது படமாகும்.