இறுதிக்கட்ட பணிகளில் விஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ்
வேலுசாமி (Author) Published Date : Sep 05, 2018 10:11 ISTபொழுதுபோக்கு
தமிழ் சினிமாவில் திரைக்கதை அமைப்பாளர் மற்றும் இயக்குனரான தியாகராஜன் குமாரராஜா, ஆரண்ய காண்டம் படத்திற்கு பிறகு சூப்பர் டீலக்ஸ் படத்தை இயக்கி வருகிறார். இவருடைய முதல் படமான ஆரண்ய காண்டம் படம் சிறந்த இயக்குனர், சிறந்த கதைக்கான தேசிய விருது, விஜய் விருது போன்ற பல விருதுகளை வென்றது. இந்த படத்திற்கு பிறகு தன்னுடைய இரண்டாவது படத்தை விஜய் சேதுபதியுடன் இணைந்து உருவாக்கி வருகிறார்.
இந்த படத்தில் விஜய் சேதுபதி முதன் முறையாக சில்பா என்ற திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் சமந்தா, பகத் பாசில், ரம்யா கிருஷ்ணா மற்றும் இயக்குனர் மிஸ்கின் போன்ற பல முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். முன்னதாக இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் தற்போது இந்த படத்தின் டப்பிங் பணிகள் மற்றும் கலர் கிரேடிங் பணிகள் போன்றவற்றை நிறைவு செய்துள்ளனர்.
இதன் பிறகு இந்த படத்தின் இறுதி கட்ட பணிகளில் படக்குழு தற்போது மும்முரமாக களமிறங்கியுள்ளது. விரைவில் இந்த படத்தின் வெளியீடு தேதியினையும் படக்குழு அறிவிக்க உள்ளது. யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்திற்கு இயக்குனர் மிஸ்கின், நலன் குமாரசாமி, நீலன் ஆகியோர் இணைந்து இந்த படத்தின் திரைக்கதையை அமைத்துள்ளனர்.