Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

விஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

விஜய் சேதுபதி திருநங்கையாக நடித்து வரும் சூப்பர் டீலக்ஸ் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

ஆரண்ய காண்டம் படத்தின் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் 'சூப்பர் டீலக்ஸ்'. இந்த படத்தில் விஜய் சேதுபதி முதன் முறையாக திருநங்கை வேடத்தை ஏற்று 'சில்பா' கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதனால் இந்த படத்தில் இவரின் லேடி கெட்டப்பை காண ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ளனர். நடிகை சமந்தா 'வேம்பு' என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரில் விஜய் சேதுபதி, சமந்தா, பகத் பாசில், ரம்யா கிருஷ்ணன், காயத்ரி ஆகியோரது கதாபாத்திர தோற்றம் வெளியாகியுள்ளது. யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வரும் இந்த படத்தினை டைலர் டர்டன்  மற்றும் வேஸ்ட் ட்ரீம் வொர்க்ஸ் போன்ற நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகின்றன. 

விஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு