Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் மீண்டும் விஜய் சேதுபதி

கண்ணே கலைமானே படத்திற்கு பிறகு தனது அடுத்த படத்திற்கான அறிவிப்பை சீனு ராமசாமி தெரிவித்துள்ளார்.

நடிகர் மற்றும் இயக்குனரான சீனு ராமசாமி நடிகர் விஜய் சேதுபதியை வைத்து மூன்று படங்களை இயக்கியுள்ளார். இவருடைய இயக்கத்தில் இது வரை நான்கு படங்கள் வெளியாகியுள்ளது. நான்கு படங்களுமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்ற படங்கள். அதிலும் விஜய் சேதுபதி, தமன்னா நடிப்பில் வெளியான 'தர்மதுரை' படம் 100 நாட்களை கடந்து வசூல் சாதனை படைத்தது.

இந்த படத்திற்கு பிறகு விஜய் சேதுபதி, விஷ்ணு ஆகியோரை வைத்து 'இடம் பொருள் ஏவல்' என்ற படத்தை உருவாகியுள்ளார். ஆனால் தயாரிப்பாளர் காரணங்களால் இந்த படம் தாமதமாகி கொண்டு வருகிறது. இதன் பிறகு  உதயநிதி ஸ்டாலின் மற்றும் தமன்னாவை வைத்து 'கண்ணே கலைமானே' என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.

இந்நிலையில் தனது அடுத்த படத்திற்கான தகவலை தற்போது 'பியார் பிரேமா காதல்' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தெரிவித்துள்ளார். இந்த படத்தில் விஜய் சேதுபதி நாயகனாக நடிக்க யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளார். ஏற்கனவே தர்மதுரை படத்திற்கும் தற்போது உருவாகியுள்ள கண்ணே கலைமானே மற்றும் இடம் பொருள் ஏவல் படங்களுக்கும் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள நிலையில் தனது அடுத்த படத்திற்கும் யுவன் சங்கர் ராஜாவை ஒப்பந்தம் செய்துள்ளார். 

இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் மீண்டும் விஜய் சேதுபதி