Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

மீண்டும் ஆண்டவன் கட்டளை இயக்குனருடன் இணைந்து விவசாயியாக நடிக்கும் விஜய் சேதுபதி

நடிகர் விஜய் சேதுபதி மீண்டும் இயக்குனர் மணிகண்டன் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.

இயக்குனர் மணிகண்டன் இயக்கத்தில் கடந்த 2016ஆம் ஆண்டில் வெளியான படம் 'ஆண்டவன் கட்டளை'. இந்த படத்தின் மூலம் நடிகர் விஜய் சேதுபதி முதன் முறையாக இயக்குனர் மணிகண்டன் இயக்கத்தில் நடித்திருந்தார். இயக்குனர் மணிகண்டன் இயக்கத்தில் வெளியான முதல் படம் 'காக்கா முட்டை'. இந்த படம் மக்களிடம் பெரும் வரவேற்ப்பை பெற்று தேசிய விருது பெற்றது. இதற்கு பிறகு மணிகண்டன் இயக்கத்தில் குற்றமே தண்டனை, ஆண்டவன் கட்டளை போன்ற படங்கள் வெளியானது.

இந்த படங்களுக்கு பிறகு இயக்குனர் மணிகண்டன் இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் படம் 'கடைசி விவசாயி'. இந்த படத்தில் முதலில் சூப்பர் ஸ்டாரை விவசாயியாக நடிக்க வைக்க இருந்தனர். ஆனால் தற்போது அவருக்கு பதிலாக விஜய் சேதுபதி கடைசி விவசாயியாக மணிகண்டன் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.

இந்த படம் ஆண்டவன் கட்டளைக்கு பிறகு மணிகண்டன் மற்றும் விஜய் சேதுபதி இணையும் இரண்டாவது படமாகும். தற்போது விஜய் சேதுபதி பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். தற்போது இவருடைய நடிப்பில் உருவாகி ஜூங்கா மற்றும் மாமனிதன் போன்ற படங்களின் படப்பிடிப்புகளை முடித்த பிறகு மணிகண்டன் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.

மீண்டும் ஆண்டவன் கட்டளை இயக்குனருடன் இணைந்து விவசாயியாக நடிக்கும் விஜய் சேதுபதி