Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் தெறிக்கும் துருவ நட்சத்திரம் டீசர்

போலீஸ் கதாபாத்திரத்தை அடுத்து சீயான் விக்ரம் சீக்ரெட் ஏஜெண்டாக கவுதம் மேனனின் துருவ நட்சத்திரம் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் டீசரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரான கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் 'அச்சம் என்பது மடமையாடா' படத்திற்கு பிறகு எனை நோக்கி பாயும் தோட்டா, துருவ நட்சத்திரம் படங்கள் உருவாகி வருகிறது. இரண்டு படங்களுமே தயாரிப்பாளர் பிரச்சனையால் பல வருடங்களாக தாமதமாகி கொண்டே செல்கிறது. இதில் கவுதம் மேனனின் கனவு படமான துருவ நட்சத்திரம் படம் சீயான் விக்ரம் நடிப்பில் அதிரடியாக உருவாகி வருகிறது. இந்த படத்தில் சீயான் விக்ரம் சீக்ரென்ட் ஏஜெண்டாக நடித்துள்ளார்.

இவருடைய குழுவில் ரிது வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ், சிம்ரன், திவ்ய தர்சினி, ராதிகா உள்ளிட்ட பல திரைபிரபலங்களை இணைத்து சாகசம் நிறைந்த ஆக்சன் படமாக உருவாக்கி வருகிறார் இயக்குனர் வாசுதேவ் மேனன். நீண்ட காலங்களாக இந்த படத்தின் அப்டேட்டுக்காக ரசிகர்கள் காத்திருந்த தருவாயில் இன்று இந்த படத்தின் டீசரை வெளியிடுவதாக அறிவித்து வெளியிட்டுள்ளது. அதன்படி சற்று தாமதமானாலும் 11:40 மணியளவில் இந்த படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.

முழுநேர ஆக்சன் படமான இந்த படத்தின் டீசரில் ஹாரிஸ் ஜெயராஜ் இசை ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது. இந்த படத்தின் வெற்றிக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை பக்க பலமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த படத்தை கவுதம் மேனனின் ஒன்றாக, எஸ்கேஎப் ஆர்ட்டிஸ்ட், கொண்டாடுவோம் என்டெர்டெய்ன்மெண்ட் போன்ற நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகிறது. இயக்குனர் கவுதம் மேனன் எழுதி இயக்கி, தயாரித்து வரும் இந்த படத்தினை லைக்கா ப்ரொடக்சன் நிறுவனம் பிரமாண்டமாக வெளியிட உள்ளது.

ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் தெறிக்கும் துருவ நட்சத்திரம் டீசர்