Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

அவதார் திரைப்படத்தை மிஞ்சும் ரெடி பிளேயர் ஒன் திரைப்படம்

ready player one movie releasing on 29th march 2018 world wide

இயக்குனர் ஜேம்ஸ் கேம்ரூன் இயக்கத்தில் வெளியான 'அவதார்' திரைப்படத்தை யாராலும் மறந்திருக்க முடியாது, அதன் பிரம்மிக்க வைக்கும் தொழில் நுட்பமும் கதையம்சமும் இன்றளவும் நமக்கு பிரமிப்பாகவே உள்ளது. தற்பொழுது உலக புகழ்பெற்ற ஜுராசிக் பார்க் (Jurassic Park) திரைப்படத்தின் இயக்குனர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (Steven Spielberg) இயக்கத்தில் உருவாகியுள்ள 'ரெடி பிளேயர் ஒன் (Ready Player One)' படம்  வரும் மார்ச் மாதம் 28ஆம் தேதி லண்டனிலும், 29ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

'ரெடி பிளேயர் ஒன் (Ready Player One)' திரைப்படத்தின் கதை வரும்  2045-ஆம் ஆண்டில் நடப்பதை போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. நவீன வளர்ச்சி அடைந்த மக்களின் வாழ்வாதாரம் சீரழிந்த நிலையில் குழப்பத்துடன் மறுவாழ்வை நோக்குகின்றனர். அவர்களது ஒரே நம்பிக்கையாக இருப்பது 'OASIS' என்ற நிறுவனத்தின் அதீத தொழில்நுட்ப வளர்ச்சியான 'விர்ச்சுவல் ரியாலிட்டி (Virutal Reality)' எனப்படும் தொழில்நுட்பத்தின் மூலம் கற்பனையான உலகத்தில் மக்கள் எதை வேண்டுமானாலும் செய்துகொள்ளலாம்.

இந்நிலையில் 'OSASIS' நிறுவனத்தின் தலைவர் இறக்கும் தருவாயில் ஈஸ்டர் முட்டையை குறிப்பிட்டு அதை அடைபவர்களே 'விர்ச்சுவல் ரியாலிட்டி (Virutal Reality)' உலகை ஆளலாம் என குறிப்பிடுகிறார். இதன் பிறகு என்ன நடக்கிறது என்பது தான் கதையின் சுவாரஸ்யம்.

இந்த 'விர்ச்சுவல் ரியாலிட்டி (Virutal Reality)' என்பது, நாம் ஒரு கண்ணாடி திரையை அணிந்து கொண்டால் , திரை எந்த வீடியோ அல்லது நேரடி ஒளிபரப்பில் இணைந்துள்ளதோ அந்த திரையில் உள்ளதை நேரில் காண்பதை போல் உணர முடியும். இந்த தொழில்நுட்பம் சாம்சங் நிறுவனம் தனது கேலக்சி மொபைல்களுக்கு ஏற்கனவே அறிமுகம் செய்துள்ளது.

இந்த படம் இந்தியாவில் ஆங்கில மொழிகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளிவரவில்லை. இந்த படம் வெளியானால் தமிழிலும் இந்த படத்தை மொழி பெயர்க்க உள்ளனர்.

அவதார் திரைப்படத்தை மிஞ்சும் ரெடி பிளேயர் ஒன் திரைப்படம்