விஷாலின் இரும்பு திரை படத்திற்கு யூ சான்றிதழ்
வேலுசாமி (Author) Published Date : Mar 03, 2018 21:10 ISTபொழுதுபோக்கு
நடிகர் விஷால் நடிப்பில் தற்போது 'இரும்புத்திரை' மற்றும் 'சண்டக்கோழி 2' போன்ற படங்கள் உருவாகி வருகிறது. இதில் கடந்த 2006-ஆம் ஆண்டு வெளியான 'சண்டக்கோழி' படத்தின் இரண்டாம் பாகமாக 'சண்டக்கோழி 2' உருவாகி வருகிறது. இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்க இயக்குனர் லிங்குசாமி இந்த படத்தை இயக்கி வருகிறார்.
இதனை அடுத்து புது முக இயக்குனர் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் 'இரும்புத்திரை' படம் உருவாகி வருகிறது. சைபர் குற்றங்கள் நிறைந்த த்ரில்லர் படமாகி உருவாகி வரும் இந்த படத்தில் ஆக்சன் கிங் அர்ஜுன் அழுத்தமான வில்லனாக நடிக்கிறார். இந்த படம் ஆக்சன் கிங்குக்கு கட்டாயம் பேசும் படமாக அமையும் என திரை வட்டாரங்கள் தெரிவிக்கிறது.
இந்த படத்தில் விஷால் இராணுவ அதிகாரியாக நடிக்க நடிகை சமந்தா, விஷாலுக்கு ஜோடியாக மருத்துவர் வேடத்தில் நடித்து வருகிறார். பலத்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே உருவாகி வரும் இந்த படத்தின் போஸ்டர், இசை மற்றும் டீசர் போன்றவை சமீபத்தில் வெளியானது. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் ப்ரொடக்சன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் தற்போது இந்த படத்தை தணிக்க வாரியத்திற்கு படக்குழு அனுப்பியுள்ளது. பின்னர் தணிக்க வாரியம் இந்த படத்திற்கு யூ சான்றிதழை அளித்து சிறப்பித்துள்ளது. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசைமைக்க நடிகர் விஷால் இந்த படத்தை தனது விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் சார்பில் தயாரித்துள்ளார். இந்த படம் வரும் ஏப்ரல் மாதம் 18இல் வெளியாகவுள்ளது.